“நித்தேஷ்! வந்துட்டீங்களா? குட் மார்னிங். நேத்து உங்களைப் பார்த்தப்போ கூட முகமெல்லாம் டல் ஆக இருந்தது. இன்னும் உடம்பு சரியாகலைன்னு நினைச்சேன்.”
கயலின் ஆனந்தம் நிறைந்த வரவேற்பு நித்தேஷிற்கு தனி தெம்பைக் கொடுத்தது.
“நீ வந்தப்போ அப்படி தான் இருந்தேன், கயல். ஆனால் நீ வந்ததும் எல்லாம் சரியா போயிடுச்சு.”
“உங்களுக்கு இப்படி கூட பேச தெரியுமா? அதிசயமா இருக்கு! ரொம்ப ஓவரா வொர்க் செய்யாதீங்க. இரண்டு நாள் வொர்க் பெண்டிங்க்ல இருக்கும். எல்லாத்தையும் ஒரே நாள்ல முடிக்க முடியாது. இந்த வாரம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமா எடுத்து செய்ங்க. லஞ்ச் டைம்ல பார்க்கலாம்.”
திரும்பி நடக்கத் தொடங்கியவளை, “கயல்,” என அழைத்து நிறுத்தினான் நித்தேஷ். அவள் திரும்பி பார்த்தாள்.
“தேங்க்ஸ் கயல். என் மேல நீ காட்டுற அக்கறைக்கு ரொம்ப நன்றி.”
கயல் எதுவும் சொல்லாது அவனை பார்த்து புன்னகை புரிந்து விட்டு சென்றாள்.
அவளின் புன்னகை அவனின் கண்களுக்கு இனிமையாக இருந்தது என்றால், நிஜமாகவே கயல்விழியுடன் பேசியது நித்தேஷிற்கு புத்துணர்வை கொடுத்திருந்தது. சூப்பர் ஹீரோ போல உணர்ந்தான்.
எல்லாம் வேதாவிடம் இருந்து போன் வரும் வரைக்கும் தான்.
போனில் வேதா பெயரை பார்த்ததுமே யதார்த்த உலகம் அவனுக்கு நினைவில் வந்தது.
“வேதா!”