சென்னை வெயிலுக்குப் போட்டி போடுவதுப் போல், நியூஜெர்சியிலும் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
நந்தினி வெயிலைப் பொருட்படுத்தாமல் அந்த வீட்டின் முன் இருந்த தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தோட்ட வேலை பழக்கமில்லை.
வீட்டில் இருந்த தோட்டத்தைச் சரி செய்ய ஆட்கள் வாரம் இருமுறை வந்து போனார்கள்.
அழகாக வெட்டப்பட்ட செடிகளும்... பூத்து குலுங்கும் ரோஜாக்களும்...
ஆங்காங்கே காற்றுக்குத் தலை அசைத்து ஆடிக் கொண்டிருந்த மரங்களும்...
நடப்பதற்குப் பஞ்சு போல் சமமாக வெட்டப் பட்டிருந்த புல்வெளியும்...
அனைத்துமே நன்றாக தான் இருந்தன...
ஆனால் அது எதுவுமே நந்தினியின் மனதைக் கவரவில்லை.
அவளுடைய கல்லூரி படிப்பைத் தொடர்ந்திருந்தால் இந்நேரம் செமஸ்டர் எக்ஸாம் தொடங்கி இருக்கும். அவளுடன் படித்த மற்றவர்கள் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் போடும் மெசேஜுகளை பார்க்கும்போது நந்தினியின் மனதினுள் அவளையும் அறியாமல் ஏக்கமும், ஆதங்கமும் ஏற்படத் தான் செய்தது.
எத்தனை எத்தனை கனவுகள் வைத்திருந்தாள்!
நந்தினியையும் அறியாமல் அவளின் கைகள் கழுத்தில் இருந்த அந்தச் சங்கிலியை வருடியது.
எங்கிருந்து எங்கே வந்து மாட்டிக் கொண்டிருக்கிறாள்?
காலேஜ் மூடியதும், ஒழுங்கு மரியாதையாக சென்னைக்கே திரும்பி சென்று இருந்திருக்கலாம்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
He seems to be really smitten by Anamika. What will nands do?