தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 31 - நவ்யா
வீடு திரும்பியப் போது ஜனனிக்கு ரொம்பவும் சோர்வாக இருந்தது. காருண்யா தர்மா இருவரின் கருத்து வேறுபாட்டுக்கு நடுவே அவள் சிக்கிக் கொண்டிருந்தாள். காருண்யா கோபத்தில் நியாயம் இருக்கிறது. தர்மா செய்வதையும் தப்பு சொல்ல முடியாது. இவர்களை எப்படி சரி செய்வது? யோசிக்க யோசிக்க அயர்வாக உணர்ந்தாளே தவிர யோசனை எதுவும் தோன்றவில்லை.
உமேஷ் இப்போது வந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு எண்ணம் அவளுக்கு தோன்றியது. அவனை பற்றி யோசித்தாளோ இல்லையோ சோர்வு எல்லாம் தெரியவில்லை.
எப்போதும் நிறுத்தும் இடத்தில் டூ வீலரை நிறுத்திப் பூட்டினாள்.
வீட்டு சாவியை எடுக்க கைப்பையில் கை வைத்தாலும் அவளுடைய கண்கள் நாலா பக்கமும் சென்று உமேஷை த
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அழைத்தப் போது அதில் குதூகலம் நிறைந்து இருந்தது.
அது வரைக்கும் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்த உமேஷ், கைகளை நேராக்கி நிமிர்ந்து நின்றான்.
அவன் பைக் மேலே வைத்து இருந்த பிட்சா டப்பாவை கையில் எடுக்கவும், ஜனனியின் உற்சாகம் அதிகமானது.
“நீ இன்னைக்கும் வந்தா நல்லா இருக்கும்னு இப்போ தான் நினைச்சேன்!”