(Reading time: 7 - 14 minutes)
Manasa Theevu
Manasa Theevu

ஞான் அப்படி கூப்பிடல."

  

"ஏய்ய்.... அப்படிலாம் ஒண்ணுமில்ல , நீ எப்படி தோணுதோ அப்படி கூப்பிடு, சரி சொல்லு என்ன திடீர்னு உனக்கு மனசு மாறிடுத்தே, என்ன ஆச்சு?"

  

"உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லணும்!"

  

"ம்.. அப்படியா? என்ன அது?"

  

அவள் வெட்கப் பட்டாள். இத்தனை குழந்தைகள் பிறந்திருந்தாலும், அவள் அவனிடம் நேரடியாக கூறியது கிடையாது.. ஆனால் இப்போதோ அவள், அவனிடம் நேரடியாக கூறும்போது அவளை அறியாமல் வெட்கம் தானே வந்தது.

  

"அட, இவ்விட நோக்கு... வெக்கமா? எண்ட குட்டிக்கு வெக்கமா?"

  

"ஐயோ நான் உங்க குட்டியா? உங்களுக்கு ஐஞ்சு குட்டிகள்  உண்டு நாயர், மறந்து போயாச்சா? இன்னும் ஒரு குட்டி வேற வர போகுது நாயரே! "

  

"எத்தனை குட்டி உணடெங்கிலும், நீதாண்டி எண்ட மொத குட்டி. ஹான்!  என்ன சொன்ன? இன்னுமொரு குட்டியா? என்ன சொல்ற நீ?"

  

"ம்ம்ம்..." என்று தலை குனிந்து, தலை ஆட்டினாள்.

  

"அட.. இன்னுமொரு குட்டியோ? இதான் முதல் முறையா நாம பேசறோமில்லை? நீ சந்தோஷமாயிருக்கியா மானசா? உனக்கு இந்த குழந்தை சந்தோஷத்தை கொடுக்குதா?"

  

"எனக்கு ஒவ்வொரு குழந்தையும், என் வயிற்றுல வளருது, என்னோட ரத்தம், நிச்சயம் சந்தோஷம்தான். "

  

"உன்கிட்ட நிறைய பேசணும் மானசா." என்றான் மாதவன்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.