தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 33 - நவ்யா
ஜனனியாக ஏதாவது சொல்கிறாளா பார்ப்போம் என்ற முடிவுடன், உமேஷ் சொன்னதைப் பற்றி வாயே திறக்காமல், வெறும் “ஜனனி,” என்றாள் சந்திரிகா.
“ஆன்ட்டி, உமேஷ் வந்துட்டானான்னு கேட்குறதுக்காக கூப்பிட்டேன்.” ஜனனி தன் குரலை சாதாரணமாக காட்டிக் கொள்ள முயல்வது சந்திரிகாவிற்கும் புரிந்தது!
“நீயே அவனுக்கு ஃபோன் செய்து கேட்டிருக்கலாமே?” ஒன்றும் தெரியாதவளைப் போல போட்டு வாங்கும் முயற்சியில் ஈடுப்பட்டாள் சந்திரிகா.
ஜனனி சிறிய இடைவெளி விட்டுப் பேசினாள்.
“அவன் பைக்ல வந்துட்டு இருக்கானான்னு தெரியலை ஆன்ட்டி. அந்த நேரத்துல கூப்பிட வேண்டாம்னு நினைச்சேன்.”
“அவன் இப்போ தான் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லை இல்லை, வேண்டாம் ஆன்ட்டி. நானே அப்புறம் பேசுறேன்.” உடனடியாக பதில் சொல்லி வேண்டாம் என தடுத்தாள் ஜனனி.
அவள் அதை சொன்ன பாணியே எதனால் அதை சொல்கிறாள் என்பதை காட்டியது.
மீடியேட்டராக மாறி உமேஷ், ஜனனியின் சண்டையை சரி செய்வது என்று சந்திரிகா முடிவு செய்தாள்.
“ரொம்ப பிஸியா இருக்கீயா ஜனனி? டைம் இருந்தா நாளைக்கு