(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

திங்கட்கிழமைகளில் வேலைக்கு செல்வது என்பது பெரும்பாலானவர்களுக்கு அலுப்பை  தரும். ஆனால் ஆகாஷை பொறுத்த வரை திங்கட்கிழமை தான் அவன் முழு உற்சாகத்துடன் அலுவலகத்திற்கு கிளம்பும் நாள்.

   

வார தொடக்கம் என்பதை சந்தோஷத்துடன் அணுக வேண்டும் என்பது சுபாஷினி சிறு வயது முதலே அவனுக்கு சொல்லிக் கொடுத்த ஒன்று...

   

அன்றும் மனம் முழுவதும் நிறைந்த உற்சாகத்துடனே அலுவலக வளாகத்தை அடைந்தான்.

   

காரை பார்க் செய்து விட்டு நடக்கும் போது அவனின் காதுகளில் அந்த பெண் குரல் விழுந்தது...

   

“என் கிட்ட சேன்ஜ் இல்லையேண்ணா, உங்க கிட்ட இருக்கா?”

   

எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக ஒலித்த அந்த இனிய குரல் அவனின் கவனத்தை கவர்ந்தது.

   

தன்னை மீறிய ஆவலுடன் திரும்பி பார்த்தான் ஆகாஷ்.

   

அந்த குரலுக்கு சொந்தக்காரி டாக்ஸியில் வந்திருப்பாள் போலும்...

   

ஒரு காலை தரையிலும், ஒரு காலை டாக்ஸிக்குள்ளேயும் வைத்தபடி இவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள்...

  

காற்றில் மெல்ல அசைந்துக் கொண்டிருந்த 'பின்' செய்திருந்த அவளின் சிவப்பு பூக்கள் நிறைந்த சாரீயை மீறி, அவன் கண்களில் முதலில் பட்டது அவள் காலில் அணிந்திருந்த ஃப்ளாட் சப்பலும், கணுக்காலில் இருந்த கொலுசும் தான்...

   

அதன் கூடவே இடை வரை நீண்டிருந்த அவளின் கூந்தலும், சின்ன மல்லிகை சரமும் அவனின் கண்ணில் பட்டது!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.