Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 34 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”முன்னெல்லாம் நான் நிம்மதியா இருப்பேன், நேரத்துக்கு சாப்பிட்டு, நல்லா தூங்கிட்டு, எந்த பிரச்சனையும் இல்லாம சம்பவம் பண்ணிட்டு வீட்டுக்குள்ள பத்திரமா இருப்பேன், என்னிக்கு நீ வந்தியோ அன்னிக்கே எனக்கு இப்படியெல்லாம் கஷ்ட காலம் வந்துடுச்சி, இனி உன்னால எனக்கு என்னென்ன நடக்குமோன்னு தெரியலை பயமாயிருக்கு”
”உங்களால என் வாழ்க்கை நாசமான அளவுக்கு எல்லாம் என்னால உங்களுக்கு எதுவும் நடக்காது, எழுந்துருங்க” என அதட்டிவிட்டு எழ அவனோ அவளது கையை விட்டவன்
”இப்ப எதுக்கு மிரட்டற“
”எழுந்து வாங்க டாக்டர்கிட்ட போகலாம்”
”எதுக்கு”
”உங்க உடம்பை பார்த்தீங்களா”
”நான் என்ன பார்க்கறது அதான் நீயே நல்லா பார்க்கறியே”
”அய்யே எனக்கொன்னும் ஆசையில்லை, உங்க உடம்பு முழுக்க காயம் சிராய்ப்பு வேற, ஒழுங்கா என்கூட வாங்க”
“எங்க” என ஆசையாக கேட்க அவளோ
”அது டாக்டர்கிட்டதான்”
“ஓ அங்கயா போலாம் போலாம், என்ன அவசரம்”
”உங்க எதிரிங்க சுற்றி வளைச்சிட்டாங்க எந்நேரம் எவன் வருவான்னே தெரியலை, அதுக்குள்ள நீங்க உங்க உடம்பை சரிசெய்துக்குங்க”