(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”ஓ போறேனே நீ என்கூட வராம இருந்தா”

   

”அது முடியாது“

   

”அப்ப என்னாலயும் உன்னை கூட்டிக்கிட்டு அங்க போக முடியாது, நீ அங்கயும் வந்து பிரச்சனை பண்ணுவ, உன்னால நான் பாட்டிகிட்ட அடிவாங்கி சாகனுமா வேணாம்மா என் உடம்பு தாங்காது”

   

”ஓ அப்ப நீங்க உங்க பாட்டிக்கு பயப்படறீங்களா, அப்ப நான் அவங்ககிட்ட போய் பேசி எனக்கு நியாயத்தை வழங்க சொல்லி கேட்டுக்கறேன்” என சொல்ல அவனோ கையெடுத்தே கும்பிட்டான்

   

”அம்மா தாயே உன் கால்ல வேணா விழறேன், என் பாட்டிகிட்ட போயிடாதம்மா” என கெஞ்ச அவளோ

   

”போதும் எழுங்க டாக்டர்கிட்ட போகலாம்” என சொல்லிவிட்டு அவள் ரெடியாக சென்றுவிட அதைக் கவனித்தவன் நொந்துப் போய்

   

”வர வர ஒருத்தருக்கும் என் மேல பயம் இல்லை, இதுக்குத்தான் அப்பவே சொன்னேன், எனக்கு இந்த தாதா ரௌடியெல்லாம் வராதுன்னு கேட்டாங்களா அவங்க” என புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு போன் வந்தது.

   

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜனனி ஜனனி ஜனனி ஜனனி 

   

”யார் போன் பண்றது” என போனை தேடிக் கண்டுபிடித்து பேசினான்

   

”ஹலோ யாரு“

   

”நான்தான் சிவா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.