”போய் பார்த்துக்கயேன் இதுக்கெல்லாம் நீ அனுமதி கேட்கற டைப் கிடையாதே என்ன விசயம்”
”இல்லை என்கூட சம்யுக்தா இருக்கா, நான் எங்க போனாலும் அவளும் வருவா, அவளை உன் பொண்டாட்டி பார்த்து அதனால ஏதாவது பிரச்சனை வருமோன்னு யோசிக்கறேன், நான் வர்ற வரைக்கும் நீ வீட்லயே இரேன்“
“முக்கியமான வேலையிருக்குடா என்னால இருக்க முடியாது”
”ப்ச் உனக்காக நான் எவ்ளோ செய்றேன், எனக்காக இதுகூட செய்யக் கூடாதா“
“நான் வீட்ல இருந்து என்னடா செய்றது”
”சம்யுக்தாவை பார்த்துக்க, அதுக்குள்ள உன் பொண்டாட்டியை நான் பார்த்துக்கறேன்”
”என்னது“ என அலற
”சரிடா அவள் என்னை பார்க்கட்டும்”
”சரி சரி சீக்கிரமா கிளம்பி வா”
”வரேன்” என சொல்லி போனை வைத்தவன் மெல்ல நடந்து வீட்டை விட்டு வெளியேறி பால்கனியில் இருந்தபடியே கீழே பார்த்து
”சித்தா அடேய் சித்தா” என அழைக்க உடனே சித்தனுடன் சேர்ந்து 2 ஆட்களும் அவரவர்கள் அடுக்கில் நின்றபடியே மேலே இருந்த தில்லையை பார்த்தார்கள்
”சொல்ணே” என்றான் சித்தன்
”சிவா போன் பண்ணான், கஸ்டம்ஸ்ல சரக்கு மாட்டிக்கிச்சாம் அதை இங்க