”சொல்டா“
”காலையில கஸ்டம்ஸ்ல கஞ்சா சரக்கு சிக்கிச்சி, அதை அங்கிருக்கற ஆபிசர் என்கிட்ட கொடுத்தாரு, அதை என் ஆளுகிட்ட கொடுத்து விட்டிருக்கேன், பத்திரமா வைச்சிக்க“
”எவ்ளோ தேறும்“
”200 கிலோ தேறும், அதோட மதிப்பே கோடிக்கணக்கில”
”ஏன்டா நேத்தே எவ்ளோ பெரிய சம்பவம் நடந்துச்சி, அதோட தாக்கம் இன்னும் ஓயலை, என் உடம்புலயும் ஏகப்பட்ட காயங்கள், வலி உயிரை எடுக்குது அது தெரியுமா தெரியாதா உனக்கு”
”ஓ தெரியுமே”
”ஏன்டா ஒரு முறை வந்து என்னை பார்க்கனும்னு தோணிச்சா உனக்கு, அப்படியே போனா போகட்டும்னு விட்டுட்ட, என்னை காப்பாத்தனும்னு எண்ணம் இல்லையா உனக்கு”
”ப்ச் சரிடா விடு என்ன இப்ப, அதான் உன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே வெறும் உடம்பு வலிதானே, டாக்டர்கிட்ட போ சரியாயிடும்”
”சரி சரி ஆமா உன் பொண்டாட்டி என்ன பண்றா”
”அவளை எதுக்கு கேட்கற” என சந்தேகமாக சிவா கேட்க அதற்கு தில்லை
”சொல்லேண்டா”
”வீட்லதான் இருக்கா”
”சரி அவளை நான் பார்க்கனும்“