”என் மேல உனக்கென்ன இவ்ளோ அன்பு”
”ம்க்கும் அன்பெல்லாம் இல்லை, நீங்க நல்லாயிருந்தாதானே எனக்கு நியாயம் கிடைக்கும்”
”நீ ஒரு சுயநலவாதி சம்யுக்தா, நான் எந்த நிலைமையில இருக்கேன், இப்ப கூட உன் விசயத்தை பத்தித்தான் நீ பேசறியே”
”இதுக்காக உங்களோட வேற என்ன கதையா பேச முடியும்”
“பேசு கேட்கறேன், வெட்டியாதானே இருக்கேன்” என அவன் சொல்லவும் சித்தன் வரவும் சரியாக இருந்தது
”ஒ அண்ணா நீ வெட்டியாதான் இருக்கியா, நல்லதாப்போச்சி பாட்டி உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க, கிளம்பு கிளம்பு போய் வரலாம்” என அழைக்க அவனோ
”இங்க வாயேன்” என பாசமாக சித்தனை அழைத்தான்
”எதுக்குண்ணா“
”அட வாடா என்னவோ இன்னிக்கு உன் மேல பாசம் பொங்கி வழியுது வா வா என்கிட்ட வா” என அன்பாக அழைக்க அவனோ தில்லையின் எண்ணத்தைப் புரிந்துக் கொண்டு உடனே வாசலுக்கு அந்தப்பக்கம் சென்றவன்
”எனக்கு நிறைய வேலையிருக்கு, அம்மா என்னை தேடுவாங்க, நான் கிளம்பறேன் அப்புறமா பேசிக்கலாம் அண்ணா” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட தில்லையோ
”தப்பிச்சிட்டான் அடுத்த முறை மாட்டட்டும் அவனுக்கு இருக்கு”
”உங்க பாட்டி உங்களை கூப்பிடறாங்கள்ல, போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வர்றது”