(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

மூளை எச்சரிக்கை விட, என்ன, எதற்கு என்று தோண்டி துருவாமல் அதை நிறைவேற்ற முயற்சி செய்தான்.

   

“லுக் ஹியர் மிஸ் சினேகா, மோஸ்ட் ப்ராபப்லி நீங்க போக வேண்டி தான் இருக்கும். என்னோட சேர்ந்து வொர்க் செய்ய இன்னும் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்க ஆர்கிடெக்ட் இருந்தா நல்லா இருக்கும்...”

   

இதெல்லாம் என்னை அசைக்காது என்பது போல ஒரு வித பிடிவாதத்துடன் அவனை பார்த்தாள் சினேகா

   

சினேகாவின் அந்த பிடிவாதம் கலந்த பார்வை ஆகாஷிற்குள் புதுவிதமான உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் மறைத்தவன், மெல்லிய புன்னகையுடன்,

   

“உங்க நல்லதுக்காக தான் சொல்றேன் மிஸ் சினேகா.” என்றான் குழந்தைக்கு எடுத்து சொல்வது போன்ற தோரணையில்.

   

இந்த அசைன்மென்ட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது சினேகாவிற்கு தெரியும்.

   

அவளுக்கு ஜாக்பாட்டாக கிடைத்திருக்கும் இந்த ப்ராஜக்ட்டிற்கு ஏற்ற அனுபவம் அவளுக்கு இல்லை என்ற பல்லவியை தான் அவளுடைய டீமில் ஏற்கனவே நிறையப் பேர் பாடிக் கொண்டிருக்கிறார்களே... 

   

இப்போது ஆகாஷும் அதே காரணத்தை சொல்லி அவளை திருப்பி அனுப்பி வைத்தால், மீண்டும் இது போன்ற ஒரு நல்ல ப்ராஜக்ட் அவளுக்கு கிடைப்பது ரொம்பவே கஷ்டம்!

   

ஆகாஷ் போன்ற ஒருவன் சொல்லி விட்டான் என்ற காரணத்தை வைத்தே அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் அவளை ஜூனியர் நிலை வேலைகளை மட்டும் செய்ய வைத்து விடுவார்கள்.

   

அப்படி நடந்தால், அவள் புதிய வேலைகளை கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போய்விடக் கூடும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.