(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

இன்னும் அந்த எம்.டி ஆகாஷை நேரில் சந்திக்க முடியவில்லை.

   

எம்.டியாம் எம்.டி! இப்படி கொஞ்சம் கூட டைம் மேனேஜ்மென்ட் இல்லாதவன் எல்லாம் எம்.டி ஆக இருந்தும் இந்த கம்பெனி வெற்றிகரமாக நடப்பது அதிசயம் தான்!!!

   

சினேகா மனதிற்குள் கடுப்புடன் புலம்பிக் கொண்டிருக்க, ஒருவழியாக அவளை எம்.டி அழைப்பதாக அழைத்தாள் ஆகாஷின் உதவியாளர் ஐஸ்வர்யா.

   

நன்றி சொல்லி விட்டு அந்த விஸ்தாரமான பெரிய அறையினுள் சென்ற சினேகா, அந்த அறையின் மையத்தில் இருந்தவனை எடை போடுவது போல பார்த்தாள்.

   

பார்வையை லேப்டாப் மீது வைத்து எதையோ டைப் செய்துக் கொண்டிருந்தான் அவன். இவன் தான் ஆகாஷ் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது!

   

கூகிள் செய்து அவனை பற்றி தெரிந்துக் கொண்ட விபரங்களை நினைவில் கொண்டு வந்தபடி அவனின் அருகே சென்றாள்.

   

“குட் மார்னிங் சார்!”

   

“குட் மார்னிங்,” சொல்லியப் படி எதையோ எதிர்பார்ப்பது போல நிமிர்ந்த ஆகாஷின் கண்களில் ஆச்சர்யம் வந்து போனது.

   

என்ன ஏது என்று சினேகாவிற்கு புரியவில்லை.

   

வேலை விஷயமாக வந்திருப்பதால் அதை பற்றி அதிகமாக யோசிக்காமல்,

   

“ஐ ஆம் சினேகா ஃப்ரம் கே.ஆர் ஆர்கிடெக்ட்ஸ், சார்,” என்றாள்.

   

“அது என் அபாயின்ட்மென்ட் வச்சே என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனால், ஹ்ம்ம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.