யோசிப்பது போல ஆகாஷ் பேச்சை முடிக்காமல் இழுக்கவும்,
“ஏதாவது பிரச்சனையா சார்?” என்றுக் கேட்டாள் அவள்.
“ப்ராப்ளம்னு இல்லை... உங்க கம்பெனில இருக்க பெஸ்ட் டேலன்டட் ஆர்கிடெக்ட் அனுப்ப சொல்லி இருந்தேன்...”
அவன் சந்தேகத்துடன் அவளை பார்த்த படி மீண்டும் பேச்சை முடிக்காமல் இழுத்தான்...
“சார், எங்க கம்பெனில நிறைய திறமையானவங்க இருக்காங்க. அதுல நானும் ஒருத்தி,“ என்றாள் சினேகா அழுத்தமாக.
அவளின் அந்த பதிலை சுவாரசியத்துடன் கேட்ட ஆகாஷின் முகம் ரசிக்கும் பாவனையை காட்டியது.
முழுவதும் புரியாத புதிராக உணர்ந்தாலும், அவனின் அந்த முக பாவம் சினேகாவின் இதயத்தில் அவனுக்கென சின்னதாக சாஃப்ட் கார்னர் ஒன்றை உருவாக்க தான் செய்தது!
இருந்தாலும், உடனேயே வெகு இயல்பாக மனதை அடக்கியவள், முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு அவனை நேராக பார்த்தாள்.
✽✽✽
சினேகாவின் பார்வையில் சட்டென தன்னிலை பெற்ற ஆகாஷ், தன்னை தானே கடிந்துக் கொண்டான்.
என்ன செய்துக் கொண்டிருக்கிறான்!!!!!
ஹுஹும்.... இவளை அவனின் கண் பார்வையில் இருந்து விலக்குவது தான் நல்லது என