பரவாயில்லையே இந்த காலத்தில் ஃப்ளாட் சப்பல், கொலுசு, சேலை அணியும் பெண்ணும் இருக்கிறாளே... என்ற எண்ணம் அவனினுள் தோன்றியது...
அடுத்த வினாடியே அதற்காக தன்னை வர்ச்சுவலாக கொட்டிக் கொண்டான்! பெண்கள் என்ன உடை உடுத்துகிறார்கள், ஒப்பனை செய்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம்... அதில் அவனுக்கு என்ன வந்தது!!! அவர்களுக்கு பிடித்ததை வசதியாக, இருப்பதை அவர்கள் செய்துக் கொள்கிறார்கள்...
கொம்பு வைத்திருக்கும் டீச்சராக மிரட்டிய மனசாட்சியின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் ஆகாஷின் கண்கள் ‘அவள்’ மீதே தான் இருந்தது!
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே டாக்ஸியில் இருந்து முழுவதுமாக கீழே இறங்கி நின்றாள் அவள்! இப்போது அவனால் அவளின் பக்கவாட்டு முகத்தை பார்க்க முடிந்தது! ஆகாஷின் மனதில் என்ன என்று விலக்க முடியாத வித்தியாசமான உணர்வு தோன்றியது!
ஆனால், அவசியமே இல்லாமல் பெண்களை பார்க்கும் பழக்கம் இல்லாதவன் என்பதால் மனதை கட்டுப்படுத்தி முகத்தை திருப்பிக் கொண்டு தன் வழியில் நடந்தான்....
இருந்தாலும் அவனின் மனதில் இருந்த உற்சாகம் பல மடங்காகி விட்டதாக ஒரு வினோத உணர்வு ஆகாஷிற்கு தோன்றி இருந்தது...
தன்னை பற்றியே நினைத்து சிரித்த படி நடந்தான்.
✽✽✽
சினேகா கடுப்புடன் தன் கடிகாரத்தை பார்த்தாள். நேரம் பதினோரு மணியை நெருங்கி கொண்டிருந்தது.
அவள் ‘ஆகாஷ் ரீடேயிலர்ஸ்’ ஆஃபீசிற்கு வந்து இரண்டு மணி நேரம் ஆக போகிறது!