தேவி இன்னும் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் இருந்தாள், அவளை அழைத்து வந்தானே தவிர ஒரு முறை கூட அவளை பார்க்கவில்லை, பேசவில்லை, அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி வந்தான் அழகரசன்.
அவனின் செயலை புரிந்துக் கொள்ள டிரைவர் மிகவும் பிரயத்தனப்பட்டான், அதற்குள் அசோக்கின் கம்பெனி வந்துவிட இம்முறையும் கார் வெளியே நின்றது, அதைக்கண்ட அழகரசனோ மென்மையாக சிரித்துவிட்டு தேவியைப் பார்த்தான், அவள் இன்னும் கோபத்தில் இருக்கவே
”தேவி” என மென்மையாக அழைத்தான் அந்த அழைப்பில் தேவியின் கோபம் சற்று தணிந்தது
”இறங்கு அசோக்கோட கம்பெனி வந்துடுச்சி வா” என அழைக்க அவளும் அமைதியாக தலையாட்டிவிட்டு காரைவிட்டு இறங்கி அவனுடன் கம்பெனிக்குள் சென்றாள்
தேவி வரவும் தன்னால் கேட் திறக்கப்பட்டது, அங்கிருந்தவர்கள் அனைவரும் மரியாதை தந்தார்கள், தேவி வந்த விசயம் கேள்விப்பட்டதும் அசோக் சந்தோஷப்பட்டான், அவளைக்காண அவனே வெளியே வர அங்கு அழகரசனுடன் தேவி வரவும் அசோக்கிற்கு பிடிக்கவில்லை, ஆனாலும் ஏதோ பிரச்சனை என நினைத்து சட்டென அழகரசனுடன் சண்டைக்கு வர தேவி தடுத்தாள்
”அசோக் ப்ளீஸ் அவர்கூட சண்டை வேணாம், நாங்க உன்கூட பேசதான் வந்தோம்” என சொல்ல அதில் அசோக்கும் குழம்பி அவர்களை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
அழகரசனும் அசோக்கை வெறுப்பேற்ற எண்ணி தேவியின் கையை பிடித்துக் கொள்ள அதைக்கண்ட அசோக்கோ
”தேவி நீ இங்க வந்து உட்காரு வா” என எம்டி இருக்கையை காட்ட அவளோ வியந்து
”இல்லை நான் எதுக்கு அங்க அது உன்னோட இடம்”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.