(Reading time: 11 - 22 minutes)
Manasa Theevu
Manasa Theevu

அவள் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர்.

  

அதைப் பார்த்த அவன் துனுக்குற்றான். " என்னடா என்ன ஆச்சு? எதுக்காக்கும் இந்த கண்ணீர்?"

  

" அறியல அத்தான், எனக்கு உங்களோடத்தான் இருக்கணும்." என்றாள் தலை குனிந்து.

  

" சரி, இப்போ கிளம்பலாம்… " என்று காரைக் கிளப்பினான். அவன் ஒன்றுமே சொல்லாமல் கிளம்பியதில் அவளுக்கு மன வருத்தம்.

  

ஒரு வேளை அவனுக்கு தன் மேல் கோபமோ என்று நினைத்து வருந்தினாள்.

  

" ஒன்னும் யோசிக்க வேண்டாம் கேட்டியா ?  நாம பின்னே இத பத்தி பேசலாம், கேட்டோ?"

  

" சரி அத்தான்!"

  

அவன் பேசியதும், அவனுக்கு கோபமில்லை என்று சந்தோஷமாயிற்று.

  

அவளைக் கூட்டிக்கொண்டு அவள் வீட்டிற்கு சென்றான். வீட்டினில் உள்ளே சென்றவுடன், மாதவனும், மானசாவும் அங்கே இருப்பதை கண்டாள். சந்தோஷத்தோடு ஓடிப்போய் மானசாவை  அணைத்துக் கொண்டாள், ரஞ்சனி.

  

"இங்கே வாடி என் மருமகளே!" என்று நகைத்துக் கொண்டே அவளை அணைத்துக்  கொண்டாள், மானசா.

  

அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து அணைத்து, இதை நான் நினைத்தே பார்க்கவில்லை. அடி கண்ணே ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நான்!" என்றாள், மானசா.

  

அவள் காதில், அவளுக்கு மற்றும் கேட்க" ஞானும் வளர சந்தோஷமா உண்டு அத்தை" என்றாள் ரகசியமாக.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.