(Reading time: 5 - 9 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

கையில் வாங்கிக் கொண்டாள்.

  

"மம்மி, மம்மி, மம்மி!" என ஷில்பா ப்ரித்தீயிடம் கொஞ்சுவதை சிறிது பொறாமையுடன் பார்த்தான் அதுல்.

  

"ஒரு நிமிஷம் முன்னாடி நான் தான் பெஸ்ட்ன்னு என்னை கொஞ்சினா. அதுக்குள்ளே உங்களைப் பார்த்ததும் கட்சி மாறிட்டா."

  

அதுலின் புகாரை மதிக்காது ப்ரித்தீ ஷில்பாவிடம் ஸ்கூலில் நடந்ததை கேட்டு தெரிந்துக் கொண்டிருந்தாள்.

  

"அதுல்!"

  

தன் பெயரை அழைத்த குரல் கேட்டதும் அதுலின் முகம் மலர்ந்தது.

  

"மாம்!" என அழைத்துக் கொண்டே அவனை அழைத்த ஷர்மிளாவின் அருகே சென்றான்.

  

"உன் அண்ணனுக்கு முக்கியமான வேலை வந்திருக்காம் அதுல். நீ எங்களை லான்கி மவுன்டேயின்ல டிராப் செய்றீயா??"

  

ஷர்மிளாவிற்கு நேரடியாக பதில் சொல்லாது எட்டி ப்ரீத்தியை பார்த்த அதுல், "எப்போவும் நான் தான் ஹெல்ப் செய்றேன். ஆனால் எனக்கு தான் இந்த வீட்டுல கெட்டப் பேரு!" என சொல்லி விட்டு ப்ரீத்தியின் பதிலுக்காக காத்திருந்தான்.

  

ப்ரீத்தி சிரித்தாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை. ஷில்பா மட்டும் கையை நீட்டி அதுலை மிரட்டினாள்.

  

"உன் கிட்ட நிறைய பேட் ஹாபிட்ஸ் இருக்கு. மம்மியை எதுவும் சொல்லாதே!"

  

"ரவுடி பேபின்னு சொன்னாங்களே அது நீ தானா?"

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.