"ஓகே?"
"அந்த ரிசர்ச் பொறுப்பை உனக்கு தான் கொடுக்கப் போறேன். நீ அங்கே லான்கி மவுன்டேயின் போய் பார்த்து எல்லாம் தெரிஞ்சு ரிபோர்ட் சம்பிட் செய்."
"ஓகே, அசைன்மென்ட்! கூல்!"
"நீ அங்கே தங்க நம்ம கம்பெனி வழியாகவே காட்டேஜ் புக் செய்திருக்கேன். டீடெயில்ஸ் ட்ராவல் டெஸ்க்ல இருந்து வாங்கிக்கோ! இது வெகேஷன் மாதிரியான அசைன்மென்ட். அதனால நீ டெய்லி ரிப்போர்ட் செய்யனும், அப்டேட் செய்யனும்னு கிடையாது. அப்பப்போ எனக்கு ஈமெயில் அனுப்பி என்ன நடக்குதுன்னு சொல்லு போதும்."
"மோனா, இது எனக்கு அசைன்மென்ட் தானே? பனிஷ்மென்ட் எல்லாம் கிடையாதே???"
"இதுக் கூட புரியலையா ஏஞ்சல்? உன்னோட லேட்டஸ்ட் ப்ரேக் அப் பாராட்டுறதுக்காக மோனா உனக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்குறாங்க!" என்றான் மார்க்!
மற்றவர்களும் அவனுடன் சேர்த்து கேலி செய்தார்கள், சிரித்தார்கள்.
ஏஞ்சலும் அதை எல்லாம் சிரிப்போடே கேட்டுக் கொண்டாள், பதில் சொன்னாள்.
இறுதியாக, "போதும், போதும், ஏஞ்சல் வருத்தப் படப் போறா. இது அவளோட பர்சனல் விஷயம். நாம இப்படி அதிகமா டீஸ் செய்றது சரி கிடையாது!" என சொல்லி அந்த பேச்சை நிறுத்தினாள் மோனா.
ஏஞ்சல் மறுப்பாக தலையை ஆட்டினாள். "நீங்க எல்லோரும் தான் எனக்கு பேமிலி! நீங்க டீஸ் செய்றதால எனக்கு ஒன்னும் ஆகாது. ஐ ஆம் ஆல்ரைட்!"
"தட்ஸ் தி ஸ்பிரிட் ஏஞ்சல். ஆல் தி பெஸ்ட். லான்கி மவுன்டேயின்ல இருந்து அசைன்மென்ட்