(Reading time: 5 - 10 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

முடிச்சு வரும் போது நம்ம டீம்க்கு டோனட்ஸ் வாங்கிட்டு வா. அங்கே இருக்க டோனட்ஸ் ரொம்ப பாப்புலர்." என்றான் மிட்ச்.

  

"ஷுயர்! பெரிய பார்சலோட வரேன்!" என வாக்குறுதி கொடுத்தாள் ஏஞ்சல்.

  

மீட்டிங் முடிந்ததுமே ட்ராவல் டிபார்ட்மென்ட்டிடம் இருந்து வேண்டிய தகவல்கள் பெற்றுக் கொண்டாள் ஏஞ்சல்.

  

அன்று மாலையே இரண்டு வாரம் தங்குவதற்கு வேண்டிய பொருட்களை பெட்டியில் எடுத்து போட்டு காரை லான்கி மவுன்டேயின் நோக்கி செலுத்தினாள்.

  

இப்படி பயணம் செய்வது, புதிய விபரங்கள் சேகரித்து ரிப்போர்ட்கள் தயாரிப்பது எல்லாமே அவளுக்கு மிகவும் பிடித்த வேலை. அதனால் குதூகலமாக பயணமானாள்.

  

அவளின் கை கடிகாரம் மணி ஏழு என்றது! மூன்று மணி நேர பயணம்!

  

வழியில் ஒருத் தடவை ரெஸ்ட் எடுக்கக் நிறுத்தினாலும் கூட பத்தரை மணிக்கு போய் சேர்ந்து விடலாம்!

  

எல்லாமே சரியாக இருப்பதாக தோன்ற உற்சாகத்துடன் காரின் ஆக்சலரேட்டரை அழுத்தினாள்!

   

தொடரும்...

Go to Nilave mukam kattu story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.