(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 17 - பிந்து வினோத்

17. இன்று உன்னைப் பார்த்தவுடன்...

  

மும்முரமாக தன் வேலையில் ஆழ்ந்திருந்த விவேக்கின் கவனத்தை அவனின் கைப்பேசியின் அழைப்பு கலைத்தது. அவனின் தொழில் முறை நண்பர் ஒருவரின் அழைப்பு என்பதை உணர்ந்து, எடுத்துப் பேசினான்.

  

"ஹலோ சிதம்பரம்... சொல்லுங்க எப்படி இருக்கீங்க?"

  

"நான் நல்லா இருக்கேன், விவேக்... நீங்க எப்படி இருக்கீங்க??? கல்யாண அரேன்ஜ்மென்ட் எல்லாம் ரொம்ப வேகமா நடக்குதுப் போலும்...."

  

"கல்யாணமா என்ன சொல்றீங்க?"

  

"என்னப்பா... உனக்கு கல்யாணத்திற்கு அவங்க வீட்டில் இருந்துப் பொண்ணு கேட்டிருப்பதா சொல்லி உன்னைப் பத்தி ஒருத்தர் இன்னைக்கு விசாரிச்சார்..."

  

"ஒ!"

  

"பேர்... ஏதோ ரவின்னு என்னவோ சொன்னார்...."

  

"பொண்ணுப் பேர் சொன்னாரா?"

  

"இல்லைப்பா.... நானே கேட்கலை... இப்போ தான் பார்க்க ஆரம்பித்திருப்பதாகவும், உன்னைப் பத்தி விசாரிச்சிட்டு ப்ரொசீட் செய்யலாம்னு பிளான் செய்வதாகவும் சொன்னார்..."

  

"ஓஹோ!!!"

  

"ஏன் விவேக் ஏதாவதுப் பிரச்சனையா?"

  

"அதெல்லாம் ஒண்ணுமில்லை சிதம்பரம்... எனக்கே இது எதுவும் தெரியாது..."

  

"ஒ!! ஓகே ஓகே... வீட்டில பேசி இருப்பாங்களா இருக்கும்... சரிப்பா அப்புறம் பேசுறேன்..."

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.