This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
Sometimes the heart sees what is invisible to the eye…
“ஹரீஷ்” – மஹாலக்ஷிமியின் குரல் கேட்டு எழுந்தான் ஹரீஷ்.
“ஹரீஷ்” – திரும்பவும் குரல் கொடுத்தாள் மஹாலக்ஷ்மி.
“வரேன்ம்மா,” – பதில் சொன்னான் ஹரீஷ். நிலாவைப் பார்த்தான். அவளிடம் சிறு அசைவுக் கூட இல்லை.
அவளை தொல்லை செய்யாமல் சத்தம் போடாமல் கதவைத் திறந்தான்.
“என்னம்மா அப்படி உங்களுக்கு அவசரம்?” – ஹரீஷ்.
“என்ன அவசரமா? மணி எட்டாக போகுது. நம்ம வீட்டுக்கு கிளம்ப வேண்டாமா? நிலா எங்கே?” – மஹாலக்ஷ்மி.
“நீங்களே வந்து பாருங்க” – ஹரீஷ் கதவை பெரிதாக திறந்து வைத்தான்.
மஹாலக்ஷ்மி நின்ற இடத்தில இருந்தே எட்டிப் பார்த்தாள். நிலா கவுச்சில் இப்போதும் நல்ல தூக்கத்தில் இருந்தாள்.
“என்ன ஜென்டில்மேன்டா நீ? அவளை கஷ்டமா தூங்க விட்டுட்டு நீ நிம்மதியா கட்டில்ல படுத்து தூங்குனீயா?”
“புது மருமகள் இப்படி தனியா தூங்குறாளேன்னு கவலைப் படாம இருக்க நீங்க என்ன அம்மா? உங்க பையன் நான் வேற எப்படி இருப்பேன்?”
“நான் கவலைப் படலைன்னு யோசிக்குறீயா? உன் மனசுல இருக்குறதை சொல்றீயா?”
“ஹ்க்கும், என்னம்மா நீங்க?”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.