This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
Love is to feel with the heart
not to deal with the heart
அன்றைய நேரம் இறக்கை கட்டிக் கொண்டுப் பறந்தது. கல்யாணத்திற்கு வர முடியாத உறவினர்கள், நண்பர்களின் வருகை, அவர்களிடம் மரியாதை நிமித்தம் பேசுவது, நிலாவை அறிமுகம் செய்வது, பரிசுகளை பெற்றுக் கொள்வது என்று எல்லாமே ஹரீஷிற்கு ஒரே ரூட்டினில் போய்க் கொண்டு இருந்தது.
மாலை நெருங்க தொடங்கியப் போது அவனுக்கு ஒய்வு கிடைத்தது. அரை மணி நேரம் குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்து வந்தால், அங்கே ஒரே கொஞ்சல் மழையாக இருந்தது.
"இது உன் வீடு நிலா. நீ என் கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். உனக்கு பிடிச்ச மாதிரி செய்," – மஹாலக்ஷ்மி.
"ஆமா, நிலா. டிவி பார்க்க எல்லாம் எங்க கிட்ட கேட்கனுமா?" – விஷ்ணு.
ஹரீஷ் அங்கே வந்ததை கூட இரண்டுப் பேரும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.
"அம்மா ஏதாவது ஸ்நாக்ஸ் இருக்கா?" – ஹரீஷின் கேள்வியில் குழந்தைத்தனம் கலந்த கோபம் இருந்தது.
மஹாலக்ஷ்மி அப்போது தான் ஹரீஷை கவனித்தாள்.
"நீ எப்போ வந்த ஹரீஷ்? ஸ்நாக்ஸ்க்கா பஞ்சம் நான் எடுத்துட்டு வரேன்," – மஹாலக்ஷ்மி.
"நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு," – அலுத்துக் கொண்டான் ஹரீஷ்.
நிலா அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன பார்க்குற சுபி?" – ஹரீஷ் அவளிடமே நேரடியாக கேட்டான்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.