(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"பேசி முடித்து விட்டு சாப்பிடுவோம். நான் உனக்கு ஃபிரெண்ட் மாதிரி தானா??"

  

பாரதி விவேக்கின் கேள்விக்கு பதில் சொல்ல வாய்ப்பு கொடுக்காது,

  

"அட இங்கே பாருடா யாரெல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்திருக்காங்கன்னு...” என்று ஏளனமாக ஒலித்த குரல் கேட்டது.

  

தங்களுக்குள் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த பாரதியும், விவேக்கும் திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தனர். விவேக்கிற்கு பேசியவனை யார் என்று அடையாளம்  புரியவில்லை ஆனால் பாரதி இறுகிப் போய் அமர்ந்திருந்தாள். ஒரு காலத்தில் யாரை அவளின் உயிர் என்றும், எதிர்காலம் என்றும் நம்பி இருந்தாளோ அதே பாலா தான் அங்கே நின்றிருந்தான்.

  

"என்ன பாரதி, நீ இந்த பக்கம் எல்லாம் வர மாட்டீயே? லைஃப் ஸ்டைல் மாத்தியாச்சா என்ன?" மீண்டும் ஒரு மாதிரியான இளிப்புடன் அவன் கேள்வி கேட்கவும், விவேக்கிற்கு கோபம் பொங்கியது... பாரதியின் முகத்தைப் பார்த்து விட்டு அவனிடம்,

  

"ஹலோ மிஸ்டர், ஒரு பப்ளிக் பிளேசில் எப்படி நடந்துக்கனும்னு உனக்குத் தெரியாது? தேவை இல்லாமல் பேசினால் அவ்வளவு தான்." என்று மெல்லியக் குரலில் மிரட்டினான் விவேக்.

  

விவேக்கின் மிரட்டும் குரலை கேட்டு அவன் பக்கம் பார்த்த பாலா,

  

"ஓ! நீ தான் அவளுடைய புது பார்ட்னரா? ஏன் பாரதி இவன் எத்தனாவது ஆளு? எனக்கப்புறம் இத்தனை வருஷத்தில எத்தனை பேரை மாத்தி இருப்ப?" என்றான் நக்கலாக!

  

விவேக்கிற்கு சட்டென அவன் யார் என்பது புரிந்தது! அது வரை உட்கார்ந்தே பேசிக் கொண்டிருந்தவன், எழுந்து நின்று, எகத்தாளமாக பேசிக் கொண்டிருந்த பாலாவின் கன்னம் பழுத்துப் போகும் வண்ணம் ஒரு அரை விட்டான். அரை வாங்கியவன் திகைத்துப் போய் நிற்கும் போதே, அவன் சட்டையை கைகளில் இழுத்துப் பிடித்த படி,

  

"நீ ஒரு பொண்ணை ஏமாற்றிட்டு, பணத்திற்காக வேறு ஒருத்தியை கல்யாணம் செய்துட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.