This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
I will do ANYTHING for YOU…
நிலா ஹரீஷை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுடைய பார்வை என்னவோ சொல்வதாக ஹரீஷுக்கு தோன்றியது. என்ன என்று தான் அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
“என்ன சுபி அப்படி பார்க்குற? நான் ஜோக்குக்கு சொல்லலை உண்மையாவே தான் சொல்றேன்.”
“அப்படின்னா நான் எவ்வளவு நாளா உங்க கண்டுப்பிடிப்பு பத்தி நான் அனுப்புன இன்வெஸ்டருக்கு டீடெயில்ஸ் அனுப்புங்கன்னு சொல்றேன். கேட்கவே இல்லை நீங்க,” – நிலா அவனைப் பற்றி அவனிடமே புகார் செய்தாள்.
அனுப்பாததற்கு காரணம் இருக்கிறது என்று விளக்கம் கொடுக்க நினைத்த ஹரீஷ் மனதை மாற்றிக் கொண்டான். அவனுடைய நிலாவிற்காக எதையும் செய்யலாம் தவறில்லை என்ற முடிவிற்கு வந்தான்.
“இப்போவே ஈமெயில் அனுப்புறேன். நீயும் இங்கேயே இரு,” – ஹரீஷ் அவனுடைய லேப்டாப்பை ஓபன் செய்து இமெயிலை திறந்தான்.
ஹரீஷின் அந்த முடிவு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் சூறாவளி பற்றி இருவருமே அப்போது அறிந்துக் கொண்டிருக்கவில்லை.
ஹரீஷ் ஈமெயில் டைப் செய்து முடித்தான். மவுஸை send பட்டன் பக்கத்தில் கொண்டுப் போனான். ஆனால் அதை க்ளிக் செய்யாமல் நிலாவைப் பார்த்தான்.
“உனக்கு ஓகே வா, சுபி? அனுப்பட்டுமா?” – ஹரீஷ் மனைவியின் அனுமதி வேண்டுபவனைப் போல அவளிடம் கேட்டான்.
நிலா திரும்பவும் சில நிமிடங்களுக்கு முன் பார்த்த அதே பார்வையை பதிலாக கொடுத்தாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.