(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அவரை முழுதாக புரிந்துக் கொண்டதாக தான் எனக்கு தோணிச்சு..."

  

"தோணும்! உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருந்தது அதனால் உனக்கு தோணும்..."

  

"அதே தான், பாரு! விவேக் கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பே உன்னிடம் கல்யாணம் பற்றி பேசினார் தானே??"

  

"அது தங்கச்சிக்காக..."

  

"கம் ஆன், பாரு! இது கூடவா நான் சொல்லணும்? அந்த கல்யாணப் பேச்சை எடுக்க அவருக்கு ஏதாவது ஒரு காரணம் வேணும் தானே?"

  

"பட் வொய்? ஏன் பவி, ஒரு வேளை முதல் நாள் நான் பேசியதற்கும் நடந்துக் கொண்டதற்கும் பழி வாங்க நினைக்கிறாரோ?"

  

பவித்ரா பதில் சொல்லாது தோழியை முறைத்தாள்.

  

"முறைக்காதே! இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் என்னால் நம்ப முடியலை... எத்தனையோ நாள் அவர் மதுவை பிக் அப் செய்ய காலேஜ் வந்திருக்கார் தானே? அப்போதெல்லாம் அவரிடம் பெரிதாக எந்த அன்பும் தெரியலையே. ப்ச்... எனக்கு ஒன்னும் புரியலை...."

  

"புரியலை தானே? அப்போ ஏன் கல்யாணத்திற்கு சரின்னு சொன்ன?"

  

"நீ அந்த இடத்தில் இருந்திருந்தால் தான் பவி புரியும்... விவேக் கோபித்துக் கொண்டு இனிமேல் பேச மாட்டேன், நாம மீட் செய்ய வேண்டாம் அப்படி இப்படின்னு சொன்னார்... ரொம்ப கஷ்டமா இருந்தது... அவரை சாமாதனப் படுத்த தான் சரின்னு சொன்னேன்... இப்படி எல்லாம் எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை..." 

  

விவேக்கின் மீது மனதில் இருக்கும் அன்பை புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் தோழியை பரிவுடன் பார்த்தாள் பவித்ரா. விவேக் அவள் மீது வைத்திருக்கும் அன்பை தெளியப் படுத்த, அவன் அவர்களின் வீடு வந்து அனைவரையும் சந்தித்து பேசியதை சொல்லலாமா

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.