This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
In you, I’ve found the love of my life and my closest, truest friend.
விஷ்ணுவும் மஹாவும் தங்களுடைய கால் வாரல்கள், கலாட்டா பேச்சுக்களை தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள். ஹரீஷ் பொறுமை குறைந்தவனாக அவனுடைய அறை இருந்த பக்கம் பார்த்தான். ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்றவள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறாள்?
போய் பார்க்கலாமா??
யோசித்த உடனே சில நாட்களுக்கு முன் நிலா ட்ரஸ் மாற்றும் போது போய் நின்றது அவனின் கண் முன் வந்து நின்றது. இப்போதும் அப்படி போய் கதவை திறந்தால் அன்றுப் போல எதிர்பாராத காட்சி கிடைக்குமா? அன்று பார்த்த காட்சியின் ஞாபகம் அவன் ஆசைக்கு தூபம் போட்டது.
இருந்தாலும், இயல்பாக நல்லவன் என்பதால் கட்டுக்கடங்காத மனதையும் கட்டி வைக்க முயற்சி செய்தான்.
ஹரீஷ் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக பார்ப்பதைக் கவனித்தாள் மஹா.
“நிலா இன்னுமா வரலை?” ஹரீஷிடம் கேள்வி கேட்டவள், அவன் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நிலாவை சத்தமாக அழைத்தாள்.
“நிலா? இன்னும் ரெடி ஆகலையா? ஹரீஷ் ரொம்ப நேரமா இருக்கானே??”
“வந்துட்டே இருக்கேன், அத்தை,” – நிலாவின் பதில் உடனே வந்தது.
ஒரு சில வினாடிகளில் நிலாவும் வந்தாள்.
ஃபோனும் கையுமாக பரபரப்பாக வந்தவளை ஆவலுடன் கவனித்தான் ஹரீஷ். அறையில் பார்த்ததற்கு அவளிடம் புதிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.