(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"னக்குப் பிடிக்கவே இல்லை பவி!"

  

நூறாவது முறையாக ஒரே வாக்கியத்தை சொன்ன தோழியை எரிச்சலுடன் பார்த்தாள் பவித்ரா. கன்னத்தில் கை வைத்து ஏதோ கப்பல் கவிழ்ந்ததுப் போல் அமர்ந்திருந்தாள் பாரதி. மாடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த பவித்ரா, கோபத்தை அடக்கி, பாரதியை பரிவுடன் பார்த்தாள்.

  

"என்ன பாரு, இது சின்ன குழந்தைப் போல சொல்லிட்டு இருக்க? என்ன பிடிக்கலை உனக்கு?"

  

"எதுவுமே பிடிக்கலை! இந்த கல்யாணம்... பவி, என்னை பற்றி விவேக்கிற்கு என்ன தெரியும்? அவர் ஏதோ தப்பா நினைத்துக் கொண்டிருக்கிறார்... "

  

"எனக்கு அப்படி எதுவும் தெரியலை, பாரு. அத்தை அவர் கிட்டப் பேசிட்டு புகழ்ந்து தள்ளிட்டாங்க! நீ ரொம்ப லக்கின்னு சொன்னாங்க... அவருடைய அப்பா கூட ரொம்ப நல்ல டைப்... எவ்வளவு சிம்பிளா இருக்கார்! சின்ன வயசில் அவர் பட்ட கஷ்டம் பற்றி எல்லாம் எப்படி மறைக்காமல் பேசி, அந்த வாழ்க்கை தான் இனிமையானதுன்னு சொல்றார்..."

  

"ம்ம்ம்ம்ம்...."

  

"உமா, அவங்க கணவர், மது எல்லோரும் நல்ல மாதிரி... விவேக்கோட அம்மா கொஞ்சம் பட்டுன்னு பேசுவாங்க, ஆனால் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டாங்க... விவேக் பற்றி எனக்கே தெரியும்..."

  

"அதை தான் சொல்றேன்... என்ன தெரியும் பவி? அவரை நாம் வெளியில் சந்தித்த ஒரு ஐந்து - பத்து சந்திப்புகளில் அவரைப் பற்றி நமக்கு என்ன புரியும்? அதே போல் தான் அவருக்கும் என்னைப் பற்றி என்ன தெரியும்?"

  

"தெரிந்துக்கனும், புரிந்துக் கொள்ளனும் என்றால் புரிந்துக் கொள்ளலாம்... என்ன பார்க்கிற... இவரை நான் கல்யாணத்திற்கு முன் ஒரு தடவை தான் பார்த்தேன்... அதன் பின் ஒரு ஐந்து ஆறு தடவை போனில் பேசி இருக்கோம் அவ்வளவு தான்... ஆனால் கல்யாணம் ஆன போது

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.