முன்னுரை
தன் மீது விழுந்த பழிக்காக சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க வந்த நாயகியும் தன் மீது விழுந்த பழியால் திருமணம் ஆகாமல் இருக்கும் நாயகனும் சந்திக்கும் போது நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.
திண்டுக்கல் மாவட்டம்
கல்யாண மண்டபம்
அழகுக்கே அழகு சேர்க்கும் விதமாக அலங்கார புடவையில் தெருவில் பவனி வரும் தேர் போல அழகாக இருந்தாள் மதுரிதா. அவளது முறை பையன் கௌசிக்கின் பிசினஸ் பார்ட்னரின் மகளின் திருமணத்திற்காக திண்டுக்கல் வந்திருந்தாள்.
மதுரிதா எவ்வளவு மறுத்தும் விடாப்பிடியாக அவளது தாய் பத்மா தனது அண்ணன் மகன் கௌசிக்குடன் சென்னையிலிருந்து அவளை திண்டுக்கல்லுக்கு அனுப்பிவைத்தார்.
மதுவுக்கு கௌசிக்குடன் வருவது விருப்பமேயில்லை. கௌசிக்குக்கு அவளை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்து அதிகமாகவே இருந்ததால் அவன் எந்த முக்கியமான இடங்களுக்குச் சென்றாலும் அவளையும் உடன் அழைத்துச் செல்வதை பழக்கமாக்கிக் கொண்டான். அவளை தன்னவள் என இவ்வுலகிற்கு அவன் அடிக்கடி காட்டிக்கொண்டே இருப்பான்.
கௌசிக் தன் தந்தையுடன் இருந்த நாட்களை விட மதுவின் தந்தை இளங்கோவனுடன் இருந்த நாட்களே அதிகம். அதுவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீட்டிற்குச் செல்வான் அதுவும் அவனது தாய் அழைத்தால் மட்டுமே இல்லையென்றால் அதுவும் இல்லை. எந்நேரமும் மதுவின் வீட்டிலேயே இருப்பான்.
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.