This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“ஒரு போன் செய்திருக்க கூடாதா? நான் ஸ்டேஷனுக்கே வந்திருப்பேனே!” அருணாச்சலம் யாரிடம் பேசுகிறார் என்று எட்டிப் பார்த்தாள் சுந்தரி.
அண்ணாமலையும், ரமணியும் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அருணாச்சலம் பெட்டியை தூக்குவது கண்ணில் படவும் ஓடிப் போய் அந்த பெட்டியை தூக்கிக் கொண்டாள் சுந்தரி.
“எப்படி இருக்கீங்க, மாமா? நல்லா இருக்கீங்களா, மாமி?” சுந்தரி அன்புடன் விசாரித்தாள்.
“ஒருத் தடவை ஃபோன் போட்டு கூட பேசலை. இப்போ மட்டும் கேளு!” ரமணி எப்போதும் போலவே எரிந்து விழுந்தாள்.
“வந்ததும் வராததுமா எதுக்கு அவக் கிட்ட இப்படி பேசுற?” மனைவியை அமைதியான குரலில் கடிந்தார் அண்ணாமலை.
“மாமி சொல்றதும் சரி தான் மாமா. பேசனும்னு இருந்தேன்.” சுந்தரி தயக்கம் இல்லாமல் தன் தவறை ஏற்றுக் கொண்டாள்.
“இருக்கட்டும், சுந்தரி. நீ எப்படி இருக்க? இனியவன் எப்படி இருக்கான்?”
“நல்லா இருக்கார், மாமா!” இனியவன் பெயர் சொன்ன உடன் சுந்தரியின் முகம் மலர்ந்ததை கவனித்த அண்ணாமலைக்கு சந்தோஷமாக இருந்தது, ரமணிக்கு எரிச்சலாக இருந்தது.
ஜெயஸ்ரீயும், அருணாச்சலமும் விருந்தினர்களுடன் பேச, சுந்தரி இனியவனுக்கு காலை உணவு தயாரிக்கும் வேலையைத் தொடர்ந்தாள்.
“சுந்தரி டைமாச்சு!” இனியவன் பரபரப்புடன் வந்தான்.
“எல்லாம் ரெடியா இருக்குங்க.” அவனுக்காக தட்டில் பூரியை எடுத்து வைத்தாள் சுந்தரி.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.