(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

கோலாகலமாக நடத்த அவனின் பெற்றோர் திட்டமிட்டிருந்தால் அதற்கு நேரம் வேண்டுமே என்று ரமேஷ் யோசனையுடன் கேட்டப் போது, நரேந்திரன் அதை மறுத்தார்.

  

"இல்லை ரமேஷ், இரண்டு மனம் இணைவது தான் கல்யாணத்தில முக்கியம். மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்... கல்யாணத்திற்கு இரண்டு வாரம் இருக்கே, அதற்குள் எல்லாம் தயார் செய்து விடலாம்..."

  

"கல்யாண அரேஞ்ச்மேன்ட்ஸ்க்கு நாங்க என்ன செய்யனும்னு சொல்லுங்க..."

  

"இது போல் எல்லாம் பேசி எங்களை ஏதோ கடன்காரங்களை போல் மாற்றி விடாதீங்க..." என்று உடனடியாக ரமேஷிடம் மறுத்த நரேந்திரன், தன் மனைவியிடம்,

   

"கற்பகம், நீ என்ன நினைக்கிற?" என்று அபிப்ராயமும் கேட்டார்.

  

"எஸ் எஸ், அரேஞ்ச்மேன்ட்ஸ் எல்லாம் ஈவென்ட் ப்ளானர் கிட்ட சொல்லி நாங்க செய்து விடுவோம்... நீங்க அதெல்லாம் யோசிக்க வேண்டாம்... தாலி, பாரதிக்கு சாரீ, நகை எல்லாம் வாங்கனும்... " என்றாள் கற்பகம்

  

"நகை எல்லாம் பாரதியிடமே இருக்கு... அவளுக்கு விருப்பமென்றால் புது நகையும் செய்துக்கலாம். அதெல்லாம் பிரச்சனை இல்லைங்க... கூரைப் புடவை, மற்ற சாரீ எல்லாம் தான் எடுக்கணும்..."

  

ற்றவர்கள் அவளின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் திருமணத்தைப் பற்றி திட்டமிட, பாரதி தயக்கத்துடன் விவேக் பக்கம் பார்த்தாள். அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவரை சந்தித்த வேளைகளில் இருந்த அந்நியத் தன்மை மாறி அவன் பார்வையில் ஒருவித உரிமை இருந்தது... அவளை பார்வையாலே விழுங்கி விடுபவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான்... அவனின் பார்வை என்னவோ செய்யவும் பார்வையை அவனிடம் இருந்து திருப்பினாள் பாரதி. விவேக்கின் அருகில் இருந்த மதுவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து தானாக அவளின் முகமும் மலர்ந்தது. மது, உமா, ஏன் நிரஞ்சன் நரேந்திரன் என அனைவரையும் இயல்பாக ஏற்று பேச முடிந்த அவளால், கற்பகத்திடமும்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.