(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

கிளம்புவதாக சொல்லி விட்டு பாரதி பக்கம் பார்வையை வீசினான். அவனின் மனதை புரிந்துக் கொண்டபடியால்,

  

"பாரதி, நீ போய் அவரை வழி அனுப்பி விட்டு வா..." என்றாள் கமலா.

  

சரியென தலை அசைத்த பாரதி விவேக்கின் பின்னே சென்றாள்... வீட்டிற்கும், காம்பவுண்டிர்க்கும் இடையில் இருந்த பகுதியில் கிடைத்த தனிமையில், அவசரமாக அவளை நோக்கி திரும்பி, முத்தமிட வருவதுப் போல் விவேக் அருகில் வரவும், பாரதி தானாக இரண்டடிப் பின்னே சென்றாள். அவளின் திகைத்த முகத்தை பார்த்த விவேக் என்ன நினைத்தானோ

  

"சாரி...” என்று மெதுவாக முணுமுணுத்து விட்டு கிளம்பிச் சென்றான்.

  

அதன் முதல் பாரதியின் மனதில் பலவிதமான குழப்பங்கள் சூழ்ந்துக் கொண்டது. அவள் எடுத்த முடிவு தவறோ என்ற கேள்வி எழுந்தது... அதை தான் பவித்ராவிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்...

   

*****

   

இப்போது பவித்ரா சொன்ன விளக்கமும், உத்திரவாதமும் பாரதிக்கு ஓரளவிற்கு தெளிவை கொடுக்க தான் செய்தது...

  

ஆனாலும் விவேக் இப்படி அடம் பிடித்து அவளை திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் காரணம் என்ன என்பது புரியாமல் அவளுக்கு குழப்பம் இருந்துக் கொண்டே தான் இருந்தது... அவள் ஒன்றும் உலக அழகி இல்லையே? மற்றபடி விவேக்கிற்கு பெண் கிடைப்பது ஒன்றும் கடினமும் இல்லையே... பணம், அறிவு, கம்பீரம் அனைத்தும் அவனிடம் இருந்தது.. பிறகு ஏன்? விடை கிடைக்காமல் தடுமாறினாள் பாரதி...

  

பாரதியின் குழப்பத்தை 'டெலிபதி'யில் தெரிந்துக் கொண்டோ என்னவோ, விவேக் அதன் பின் கடைக்கு செல்ல அவர்களுடன் வரவில்லை. சேலைகள் தேர்வு செய்ய கற்பகம், மது, உமா மட்டும் வந்தனர். விவேக் இல்லாமல் அவர்களுடன் சென்றப் போதும் பாரதியின் மனதில்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.