(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

எங்க காஃபி டைம் எல்லாம் முடிஞ்சாச்சு...” என்ற பவித்ரா, முன்பு விட்டிருந்த இடத்தில் இருந்து உமாவிடம் பேச்சை தொடர்ந்தாள்... மறக்காமல் பாரதியையும் அவர்களின் பேச்சில் சேர்த்துக் கொண்டாள்...

  

பவித்ராவும், உமாவும் இயல்பாக பேச்சை தொடரவும், பாரதியிடம் இருந்த தயக்கமும் மெதுவாக மறைந்தது.

   

மூவரும் பேசிக் கொண்டிருந்தப் போது, கற்பகம் அங்கே வந்து சேர்ந்தாள்.

  

பரவாயில்லையே பாரதி, சீக்கிரம் எழுந்தாச்சா?” என மருமகளிடம் வினவவும் செய்தாள்!

  

ஆமாம், அ...அத்தை... எப்போதும் ஆறு மணிக்கே எழுந்து பழக்கம்...”

  

குட்! நல்ல பழக்கம். ஆனால் இங்கே நீ அப்படி ஆறு மணிக்கு எழுந்திருக்கனும்னு கட்டாயம் இல்லை...” பேசியப்படி பாரதியை கவனித்த கற்பகத்தின் முகம் மாறியது.

  

பாரதி, நகை எல்லாம் எங்கே? என்ன இது வெறும் தாலியோட உட்கார்ந்திருக்க?”

  

இல்லை அத்தை...”

  

பாரதி, உன் கிட்ட திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்ல முடியாது... நேற்று வரை நீ எப்படி இருந்தாலும், இன்று நீ இந்த வீட்டு மருமகள்... இந்த வீட்டு கௌரவத்தை காப்பாற்றும் கடமை உனக்கும் இருக்கு. கல்யாணத்திற்கு வர முடியாத நிறைய பேர் இன்னைக்கு வருவாங்க, இப்படி நீ வெறும் கழுத்தோடு இருந்தால் வேண்டாத பேச்செல்லாம் வரும்...”

  

பேசிக் கொண்டே போன கற்பகம், பாரதியின் முகத்தைப் பார்த்து விட்டு தன்னை நிதானப் படுத்திக் கொள்ள முயன்றாள். அதற்குள் பவித்ரா அவசரமாகப் பேசினாள்.

  

இல்லை மேடம், பவித்ராவும் விவேக் சாரும் எங்க வீட்டுக்கு இன்னைக்கு மறுவீடு வராங்களே அதைப் பத்தி பேச தான் பாரதி வந்தா. என் கிட்டே கேட்க வந்த அவசரத்தில்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.