This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சூடாக இருந்த டீயில் இருந்து தேயிலையும், ஏலக்காயும் கலந்த நறுமணம் வீசியது.
வாசனையே மனதை கொஞ்சம் அமைதிப் படுத்துவதை உணர்ந்த தமிழ்ச்செல்விக்கு திடீரென ஒரு கேள்வி எழுந்தது.
“எங்கே இருந்து டீ வாங்கினீங்க ஷ்யாம் சார்?”
தோளில் மாட்டி இருந்த ஃபிளாஸ்க்கை எடுத்துக் காட்டினான் ஷ்யாம் சுந்தர்.
“எப்போ ட்ரெயின்ல பயணம் செய்தாலும் முதலேயே டீ வாங்கி ப்ளாஸ்க்ல வச்சுப்பேன். இது என் பழக்கம்.”
“நல்ல பழக்கம் சார்.”
அவனின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டவள் சிறிது பதற்றம் குறைய சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.
“அஞ்சு மணி நேரத்துல சென்னை போயிடுவோம் தமிழ். நீ டீ குடிச்சுட்டு படுத்து தூங்கு. நான் இந்த சீட்டுல தூங்குறேன்.”
சொல்லிவிட்டு ஷ்யாம் விலகி சென்று விட, தமிழ்ச்செல்வி தன்னை தானே அசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
அப்பாவிற்கு பிறகு அவளை பற்றி யோசிக்கவோ, கவலைப் படவோ யார் இருக்கிறார்கள். அவள் துணிந்து இந்த முடிவை எடுத்திருக்காவிட்டால் பிடிக்காத வாழ்க்கையுடன் புழுங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
கையிலிருந்த பிளாஸ்டிக் கப்பை அவள் வாயருகே கொண்டு சென்ற நேரம், சத்தமான ஹாரன் ஒலியுடன் சடன் ப்ரேக் அடித்து விட்டு, பின் மீண்டும் வேகம் எடுத்து, ரயில்வண்டி தன் பயணத்தை தொடர்ந்தது.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.