(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“ஹோட்டல், மெஸ்ன்னு ஏதாவது அரேன்ஜ் செய்துக்குறேன்,” என்றாள் சக்தி.

  

“அதெல்லாம் இரண்டு நாள் நல்லா இருக்கும். அப்புறம் அலுத்துப் போயிடும். நான் உங்களுக்காக ஸ்பெஷலா ஒன்னும் செய்யலை. எங்க வீட்டுல சமைக்குறதை கொடுக்குறேன், அவ்வளவு தான். போங்க போய் ஃபாஸ்ட்டா குளிச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு எடுத்து கொடுத்துட்டுப் போறேன்.”

  

“பரவாயில்லை சத்யா. நான் மெதுவா சாப்பிட்டுக்குறேன்...”

  

“ஹுஹும்... பஞ்சத்துல அடிப்பட்ட மாதிரி பசில இருக்கீங்கன்னு பார்த்தாலே தெரியுது. எதுக்கு இந்த பொய்யான பேச்செல்லாம்? போங்க சக்தி, சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க”

  

சக்தி சென்று விடவும், வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவில் கொஞ்சம் ஒரு தட்டில் எடுத்து வைத்து, சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பர்வதம் பாட்டியிடம் எடுத்துப் போய் கொடுத்தாள் சத்யா.

  

“சாம்பாரா சத்யா? வாசனை தூக்குது. உன் சிநேகிதி இங்கே தங்குறதுல எனக்கு தான் வசதியா இருக்கு,” என்றாள் பர்வதம் முகம் மலர!

  

“ஆறிடப் போகுது, முதல்ல சாப்பிடுங்க பாட்டி. அப்புறமா பேசலாம்.”

  

சக்தி குளித்து முடித்து அங்கே வந்தப் போது சத்யாவும், பர்வதம் பாட்டியும் சீரியல் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

  

“இவ எதுக்கு பாட்டி அவளுக்கு விஷம் கொடுக்குறா?”

  

“சொத்துக்காக கொடுக்குறா. பாவம் அந்தப் பொண்ணு.”

  

“என்ன பாவம்? அவ மட்டும் நல்லவளா என்ன?”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.