(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

இரண்டுப் பேரும் அவள் வந்ததை கவனிக்காமல் பேசிக் கொண்டே போகவும், மெதுவாக தொண்டையை கணைத்துக் கொண்டாள் சக்தி.

  

“ஹ்க்கும்!”

  

பேலஸோ பேன்ட்டும், டாப்ஸும் அணிந்து கேஷுவல் தோற்றத்தில் இருந்தாள் சக்தி. ஜீன்ஸ் டாப்ஸை விட இது அவளுக்கு நன்றாக பொறுந்தி இருந்தது.

  

“சக்தி, வந்துட்டீங்களா? வாங்க, சாப்பிடுங்க,” என்றாள் சத்யா.

  

“நான் மெதுவா சாப்பிடுறேன். நீங்க டிவி பாருங்க...”

  

“அச்சச்சோ எனக்கு சீரியல் பார்க்குற பழக்கம் எல்லாம் கிடையாது,” என மறுத்தாள் சத்யா.

  

“அப்போ தெரிஞ்ச மாதிரி கதை பத்தி சொல்லிட்டு இருந்தீங்க?”

  

“அப்படி தான் கதை இருக்கும்னு ஒரு நம்பிக்கை.”

  

தட்டை எடுத்து வைத்து சக்திக்கு சாதம் சாம்பார், கூட்டு, பக்கோடா என எடுத்து வைத்துக் கொடுத்தாள் சத்யா.

  

“நீங்களும் சாப்பிடுங்க சத்யா.”

  

“வேண்டாம் சக்தி. அவர் ஊருல இருக்கும் போது நானும் அவரும் ஒன்னா தான் சாப்பிடுவோம். அதனால என்னை பத்தி யோசிக்காம நீங்க சாப்பிடுங்க.”

  

“தேன் கொடுத்து வச்சவர்.”

  

“அதென்னவோ தெரியலை, ஆனால் நான் லக்கி, அது எனக்கு தெரியும்,” என்றாள் சத்யா புன்னகையுடன்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.