This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
Your love gives me confidence to be myself.
கேள்வியை கேட்டு விட்டு நிலா சிரிக்க, மஹா மருமகளின் காதை திருகினாள்.
“உங்கம்மா உனக்கு ரொம்ப ஓவரா தான் செல்லம் கொடுத்திருக்காங்க நிலா.”
“அவங்க இப்போ உங்க ஃபிரென்ட் தானே, உடனே ஃபோன் போட்டு நாலு வார்த்தை திட்டி உங்க மாமியார் கெத்தை அவங்களுக்கும் காட்டுங்களேன்,” என்றாள் நிலா சிரிப்பு மாறாமலே!
“அம்மாவை திட்ட சொல்ற ஒரே மக நீயா தான் இருப்ப!”
“அப்படி இல்ல அத்தை. உங்களுக்கு எங்கம்மாவோட இன்னொரு முகம் தெரியாதே! திட்டிப் பாருங்க அப்போ தான் தெரியும்! அதுக்கு அப்புறம் உங்கம்மா உன்னை செல்லமா வளர்த்தாங்கன்னு சொல்லவே மாட்டீங்க!”
“ரூபி அப்படியே இருக்கட்டும் நிலா! அவ சிரிச்சு பேசுறதை பார்க்கும் போது எனக்கும் மனசுக்கு நல்லா இருக்கு. உங்கப்பா முகமும் இப்போ தான் சரியாகி இருக்கு.”
“பின்னே அவரோட லவ் ஆஃப் தி லைஃப் சிரிச்சா அவருக்கு ஒரு கோடி சன்லைட், ஒரு கோடி மூன்லைட் போல தான் இருக்கும்!”
“அப்படி இருந்தா தான் மருமகளே அவர் நல்லவர்!”
“அத்தை, சொல்ல மறந்துட்டேனே எங்கம்மா அப்பாவோட 30த் அனிவர்சரி வரப் போகுது. ஏதாவது ஸ்பெஷல் கிஃப்ட் வாங்கனும்.”
“ஹேய், ரூபி என் கிட்ட சொல்லவே இல்லையே!?!”
“அம்மா மறந்துட்டாங்க அத்தை. நேத்து நைட் அவங்க கிட்ட ஃபோன்ல பேசினப்போ நான் தான் ஞாபகப் படுத்தினேன். சின்னதா ஃபங்ஷன் வைக்க சொன்னேன். சரின்னு சொல்லி
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.