This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விவேக்கோ தன் கைப்பிடியில் இருந்த பாரதியின் விரல்களைப் பிடித்து விளையாடியப் படி,
“அம்மா விஷயத்திற்கு ஒரு ஈசி சல்யுஷன் இருக்கு ரதி..." என்றான்.
பாரதி இப்போதும் இயல்புக்கு திரும்பி இராதவளாக கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
"உனக்குப் பிடிக்காததை அம்மா சொன்னால், அவங்க கிட்ட நெகட்டிவா எதையும் சொல்லாமல், விவேக் தான் அப்படி சொன்னாரு, விவேக் கிட்ட சொன்னேன் அப்படி, இப்படின்னு என் மேல பழியை போட்டு விட்டுரு...” என்றான் விவேக் ஈசியாக!
“ஆனால்...” என பாரதி பேச முயற்சி செய்ய, விவேக் அதற்கு இடம் கொடுக்காமல் பேசினான்...
“இரு இரு... நானே சொல்லிடுறேன்... அம்மா என் கிட்ட அதைப் பத்தி ஏதாவது கேட்டால், நான் மேனேஜ் செய்துப்பேன்... நீ கவலைப் பட வேண்டாம்... நம்ம கல்யாணம் என் அம்மா அப்பாவின் பரிபூரண சம்மதத்துடன் தானே நடந்தது... அதனால் நீ எதுக்கும் கவலைப் பட வேண்டாம் ரதி... நீ உனக்கு பிடிச்ச மாதிரி இரு...”
“ம்ம்ம்...”
அமைதியாக தலை அசைத்த பாரதியின் அருகே நெருங்கி அமர்ந்த விவேக்,
“அடுத்த விஷயம் நம்ம ஹனிமூன் பற்றி...” என்றான்.
பாரதி இப்போது தரையில் பார்வையை பதித்து அமைதியாக இருந்தாள்...
“உனக்கே தெரியும் நம்ம கல்யாணம் ரொம்ப அவசரமா நடந்தது... இங்கே அம்மா கம்பெனியில் ஒரு பெரிய சேன்ஜ் இப்போ தான் இனிஷியேட் ஆகி இருக்கு... இப்போ நான் வெளி ஊர் போவது கொஞ்சம் கஷ்டம்... இன்ஃபாக்ட் நான் இப்போ லீவ் கூட அதிகமா போட முடியாது... உடனே ஆஃபீஸ்க்கு போகனும்... உனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கும்... எனக்கு தெரியும்... புரியவும் செய்யுது... எனக்காக நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கனும்... எந்த ரீசன்க்காகவும்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.