வருடம் 1981
மெட்ராஸ்
பிறந்ததில் இருந்து கிராமத்தில் வாழ்ந்து இப்போது பெரிய நகரத்தின் வாசலுக்கு முதல்முறையாக அடியெடுத்து வைத்தாள் ஜானகி. அவளுக்கு அது என்ன ஊர் என்று கூட தெரியவில்லை, தன் தந்தையின் கரத்தை பற்றிக் கொண்டாள் அவளுக்குள் இருந்த தைரியம் இந்த ஒரு வருடத்திற்குள் காணாமலே போய் விட்டது. புது ஊர், புது மக்களைக் கண்டதும் பயந்துவிட்டாள், அவளின் பயத்தைக் கண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னார் ராமமூர்த்தி
”ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை, நான் இருக்கேன்ல பயப்படாதம்மா” என சொல்ல அவளோ
”இந்த ஊர் பேர் என்னப்பா”
”இதை மெட்ராஸ்ன்னு சொல்வாங்கம்மா”
”மெட்ராஸா ஏன்பா தெரியாத ஊர்ல நாம என்னப்பா செய்றது” என கேட்க அவரோ
”இந்த ஊர் நமக்கு தெரியாதுதான் ஆனா, இங்க என் நண்பன் ஒருத்தன் இருக்கான், நம்ம ஊர்க்காரன்தான், நீ பிறக்கறதுக்கு முன்னாடியே ஊரைவிட்டு மெட்ராஸ் வந்துட்டான்”
”ஏன்பா”
”பிழைப்பு தேடி ஊரைவிட்டு குடும்பத்தோட இங்க வந்துட்டான். இப்போதைக்கு அவனோட முகவரிதான் என்கிட்ட இருக்கு, போய் பார்க்கலாம் அவர்கிட்ட உதவி கேட்கலாம்”
”வேணாம்பா எப்பவோ ஊரைவிட்டு போனவரு, நமக்கு எப்படிப்பா உதவி செய்வாரு, வேணாம்பா”
”முயற்சிக்கலாம்மா”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.