(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

மறுவார்த்தை சொல்லாமல் அம்மாவிடம் வந்து நின்றான் அருண்.

  

“வரோம்,” என்று இரண்டுப் பேருக்கும் பொதுப்படையாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் அஹல்யா.

  

“என்ன அபினவ் உன்னைப் பார்த்து ரொம்ப பயப்படுறாங்க?” என்றாள் சத்யா!

  

“நீங்க எங்கே இங்கே அதை முதல்ல சொல்லுங்க,” என்றான் அபினவ்.

  

“நீ தானே அஹல்யா அஹல்யான்னு புலம்பிட்டுப் போன. சரின்னு ஷாலினி ஸ்கூல்ல போய் அவங்களைப் பார்த்தேன். நீ சொன்ன மாதிரி அவங்க பின்னாடி இருக்க மர்மத்தை கண்டுப்பிடிக்குறதுன்னு நானும் முடிவு பண்ணிட்டேன்,” என இலகுவாக விளக்கம் கொடுத்தாள் சத்யா.

  

“என்ன நீங்க, சமையலுக்கு என்னன்னு முடிவு செய்ற மாதிரி சொல்றீங்க?”

  

“அப்படி தான்னு வச்சுக்கோ. நீ இப்போ என்ன செய்றனா உங்க பில்டிங்கல எங்கேயோ புதைஞ்சு இருக்க அந்த பழைய அஹல்யா சம்மந்தப்பட்ட கேஸ் ஃபைலை தேடிக் கண்டுப்பிடிச்சு, படிச்சு, கேஸ் பத்தின டீடெயில்சை என் கிட்ட சொல்ற!”

  

“நானா? என்னால முடியாது. நீங்க இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்கலாமே?”

  

“அதுக்கு அப்புறம் நான் டிவோர்ஸ் லாயரை தேட வேண்டி இருக்கும். அது உனக்கு பரவாயில்லையா? இங்கே பாரு, உனக்கு அஹல்யா சுத்தி இருக்க ரகசியம் தெரியனுமா வேண்டாமா?”

  

“தெரியனும்!”

  

“இதை மட்டும் பட்டுன்னு சொல்ல தெரியுதுல, அப்புறம் என்ன பயம்? நான் ஒன்னும் நீ கொடுக்குற டீடெயில்ஸ் வச்சு தப்பா எதையும் செய்ய மாட்டேன். நம்பிக்கை இருந்தா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.