மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 09 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
மார்க்கெட்டிற்கு அருணுடன் வந்த அஹல்யா அங்கே நின்றிருந்த அபினவை கவனிக்காமல் அவனை தாண்டி சென்றாள். இந்த தடவை அபினவ் அமைதியாக இருக்கவில்லை.
“ஹாய் அருண்” என்றான்.
அபினவை திரும்பி பார்த்த அருண், அவன் பக்கத்தில் ஓடி வந்தான்.
“நீங்க விளையாடவே வரலை,” பாதிப் புகாரும் பாதி கேள்வியுமாக கேட்டவனிடம் சிரித்து மழுப்பினான் அபினவ்.
அஹல்யா ஒதுங்கி நின்று அவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திடிரென அங்கே வந்தாள் சத்யா! அபினவ் அவளை அங்கே அதுவும் அஹல்யாவின் முன் எதிர்பார்த்திருக்கவில்லை.
“அபினவ், உனக்கு இன்னைக்கு இங்கே வேலையா?” என்று ஒன்றும் தெரியாதவளைப் போல கேட்டாள் சத்யா.
“ஆமாம் ஆமாம்!”
தட்டு தடுமாறி சொன்ன அபினவைப் பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்த சத்யா, அஹல்யாவை பார்த்தும் புன்னகைத்தாள்.
“என்னை ஞாபகம் இருக்கா டீச்சர்? ஸ்கூல்ல பார்த்தோம். நான் ஷாலினியோட அம்மா,” என்றாள் சத்யா.
“ஆ, ஞாபகம் இருக்கு. சாரி, எனக்கு வீட்டுல அவசர வேலை இருக்கு. இன்னொரு நாள் பொறுமையா பேசலாம்,” என சத்யாவிடம் சொன்ன அஹல்யா, அருணை பார்வையால் அழைத்தாள்.