(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“அஹல்யாவை பத்தி யோசிச்சு பாருங்களேன். அவங்களை பத்தி யாருன்னு தெரியாதவங்க கூட தப்பா பேசுறாங்க. சந்தேகமா பார்க்குறாங்க. தப்பே செய்யாம அவங்களுக்கு இந்த தண்டனை தேவையா?”

  

“ஆனால் அஹல்யாக்கும் அந்த சேகரனோட சாவுக்கும் சம்மந்தமே இல்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

  

“எப்படின்னு சொல்ல முடியலை சக்தி. எனக்கு அவங்களைப் பார்த்தா தப்பா தெரியலை.”

  

“நைஸ் ஜோக் சத்யா! முகத்தை பார்த்து குற்றவாளியா, இல்லையான்னு தெரிஞ்சுக்க முடிஞ்சா போலீஸ், ஃபோரன்சிக்ஸ் டீம், கோர்ட் எல்லாம் வேண்டவே வேண்டாமே.”

  

“நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனாலும், அஹல்யா தப்பானவங்களா எனக்குத் தோணலை.”

  

“ஓகே! உங்க இன்ட்யூஷன் சரியாவும் இருக்கலாம் தப்பாவும் இருக்கலாம். ஆனால் நாம இன்வெஸ்டிகேட் செய்தால் ஓபன் மைன்டோட தான் செய்யனும். விசாரிக்க விசாரிக்க ஒவ்வொருத்தரையா நம்ம சந்தேக லிஸ்ட்ல இருந்து எடுக்கலாம்.”

  

“ஓகே டீல் சக்தி!”

  

“டீலா?”

  

“நீங்க தான் இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் செய்யப் போறோம்னு சொல்லிட்டீங்களே!”

  

இல்லையென்று சொல்ல நினைத்த சக்தி, மனதை மாற்றிக் கொண்டாள்.

  

“ஓகே நாம ஸ்டார்ட் செய்வோம். முதல்ல போலீஸ் விசாரிச்சவங்க கிட்ட பேசலாம். அதுக்கு அப்புறம் அந்த அஹல்யா கிட்ட நேரா பேசலாம்.”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.