(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“டீச்சர் இருங்க!”

  

அபினவ் கூப்பிடுவது காதில் விழாததுப் போல திரும்பி பாராமல் நடந்தாள் அஹல்யா.

  

“போலீஸ் தான நீங்க? ஊருல ஆயிரம் பிரச்சனை இருக்கு. அதை எதையுமே பார்க்க மாட்டீங்களா? அடுத்த தடவை இன்ஸ்பெக்டர் கிட்ட மட்டும் இல்லை கமிஷனர் கிட்ட கம்ப்ளெயின்ட் செய்வேன்!“

  

அபினவிடம் அந்த பெண்மணி தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தாள்.

   

அபினவ் அதைக் கவனிக்காது அவனை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்த அஹல்யாவையே பார்த்துக் கொண்டு நின்றான்!

  

🌼🌸❀✿🌷  

   

பாங்கில் பணம் கட்டிய ரசீதை ஹான்ட் பேகில் வைத்துக் கொண்டே வந்தாள் அஹல்யா.

  

“எப்படி இருக்கீங்க டீச்சர்?” அபினவின் குரல் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

  

அவளுடைய முகத்தில் வந்த ஆச்சர்யத்தை ரசித்தான் அபினவ்.

  

“அருண் சொன்னான் நீங்க இந்த பாங்குக்கு வருவீங்கன்னு. தினமும் பார்ப்பேன், இன்னைங்கு தான்  உங்க வண்டி இருந்துச்சு.”

  

அஹல்யா பதில் ஒன்றும் சொல்லாமல் அவள் ஸ்கூட்டியை நிறுத்தி இருந்த இடம் நோக்கி நடந்தாள். அபினவும் அவளுடன் நடந்தான்.

  

“என்னால உங்க வேலையில தொல்லை. நீங்க என் கிட்ட பேசாம இருக்குறது தான் உங்களுக்கு நல்லது.” தன் டூ வீலரின் சீட்டுக்கு அடியில் ஹான்ட் பேகை வைத்துக் கொண்டு சொன்னாள் அஹல்யா.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.