(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 14 - Chillzee Story

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

தேன் சார் தப்பா சொல்லலை. எனக்காக சொன்னாருன்னு நினைக்கிறேன்,” என அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கவனித்து சொன்னான் அபினவ்.

  

“தேங்க்ஸ் அபினவ்,”  சக்தி சில வினாடிகள் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். பின் சத்யாவிடம் பேசினாள்.

  

“ஓகே சத்யா. இதுக்கு மேல நாம டைரக்ட் ஆக்ஷன் ஸ்டார்ட் செய்றது தான் நல்லா இருக்கும். முதல்ல இவர் சொல்ற அந்த எதிர் வீட்டு லேடியை சந்திக்க முயற்சி செய்வோம். இப்போ இல்லைனாலும் சீக்கிரமே அஹல்யா கிட்டேயும் நாம பேச வேண்டி இருக்கும். அவங்களுக்கு நாம இன்வெஸ்டிகேட் செய்றது தெரிஞ்சு இருக்குறது தான் நல்லது”

  

“அஹல்யா கிட்ட நான் சொல்றேன் மேடம்” – அபினவ்

  

‘ஓகே! அப்போ அந்த எதிர் வீட்டு லேடியை எப்படி யாருன்னு கண்டுப்பிடிச்சு பேசுறது?”

  

“இவன் சொல்ற ட்வென்டி போர்த் ஸ்ட்ரீட்ல எனக்கு ஒரு பிரெண்ட் இருக்காங்க சக்தி. அவங்களை பார்க்குற மாதிரி போவோம். அப்படியே இந்த லேடி யாருன்னும் கண்டுப்பிடிச்சு பேசலாம்”

  

“அப்படியும் கண்டுப்பிடிக்க முடியலைன்னா, அஹல்யா வீட்டு கேட் பக்கமா போங்க! உடனேயே இவங்க வந்திருவாங்க!’ – அபினவ்

  

“இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு! அதையே முதல்ல செயலாம் சக்தி.” – சத்யா

  

“சத்யாக்கா சக்தி மேடம் இருக்காங்க, இருந்தாலும் பத்திரமா இருங்க. உங்க மேல சின்னக் கீறல் பட்டா கூட தேன் சார் என்னை தொலைச்சு கட்டிடுவார்”

  

“உன் நம்பரை தான் க்விக் டையல் நம்பரா வச்சிருக்கேன் அபி. கவலையே படாதே, அப்படி கீறல் படுற மாதிரி தெரிஞ்சா உடனே உனக்கு போன் செய்றேன். நீ வந்து என்னை காப்பாத்திடு”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.