This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
I adore you like a bee loves the flowers. You are my honey, my dream, my everything!
ஏன் தள்ளி விட்டாய் என்பதுப் போல நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷ், அவள் உதட்டில் வந்த புன்னகையை கவனித்தானோ இல்லையோ, திரும்பவும் அவளின் இதழ்களை சிறை செய்தான். இந்த முறை முன்பை விட அவனின் உதடுகளுக்கு தைரியம் அதிகமாகி இருந்தது.
திரும்பவும் அவனை விட்டு விலக நிலா முயற்சி செய்தாள். அவனும் அவளை அனுமதித்தான். இந்த முறையும் ஒன்றிரண்டு வினாடிகள் ப்ரேக் கொடுத்து விட்டு மீண்டும் அவளின் உதடுகளை மூடினான்.
இதுவே மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் தொடர்ந்துக் கொண்டே இருந்தது.
இரண்டுப் பேரும் சிறுக் குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடுவதுப் போல தங்களுடைய உதடுகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஹரீஷின் இந்த காதல் அவதாரம் நிலாவை மயக்கியது. அவளுக்கு எப்போதுமே அவனைப் பிடிக்கும். அதிலும் அவனின் இந்த புது காதலன் அவதாரம் அவளை மொத்தமாக அவன் வசம் செல்ல வைத்தது.
ஆனால் ஏன் எதனால் என்ற கேள்வி அவளை நச்சரித்தது. விடைத் தெரிந்துக் கொள்ளா விட்டால் தலை வெடித்து விடும் என்று தோன்றவும் திரும்பவும் ஹரீஷை விட்டு தள்ளி வர முயற்சி செய்தாள்.
இப்போதும் அவளுக்கு ப்ரேக் கொடுக்க உதடுகளுக்கு விடுதலை கொடுத்தான் ஹரீஷ். ஆனால் அவன் பார்வை என்னவோ அவள் முகத்திலேயே இருந்தது.
அவனின் பார்வையை சந்திக்க இயலாமல் நிலாவின் முகத்தில் வெட்கத்தின் சாயலாக நிறம் மாற்றம் ஏற்பட்டது.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.