வருடம் 1982
மெட்ராஸ்
ஒரு வாரம் கழித்து…
ஜானகியே மனம் மாறி விஸ்வநாதனிடம் வந்து தயங்கி நின்றாள், அவரும் இந்த ஒரு வாரத்தில் பலவித குழப்பத்துடன் இருந்தபடியால் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் யாருடனும் பேசாமல் நோயாளி போல இருந்தார். இரவும் பகலும் ஜானகியை பற்றியும் கருணாவை பற்றியும் நினைத்தபடியே சரியாக உண்ணாமல் உறங்காமல் ஏதோ போல் இருந்தார், அவரை அப்படி பார்க்கையில் ஜானகிக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது, அவரோ வந்தவளை ஏறிட்டுப் பார்த்தார், அவரின் பார்வையில் ஒரு வெறுமை, இனிமேல் என்ன நடந்துவிடப்போகிறது என்ற விரக்தி தெரிந்தது, அதில் அவளோ பேசுவதற்கு முன் கைகூப்பி மன்னிப்பு வேண்டினாள்
”என்னை மன்னிச்சிடுங்க நான் இருந்த குழப்பத்தில ஏதேதோ நடந்துப் போச்சி, என்மேல தப்பிருந்தா என்னை தண்டிங்க பாவம் உங்க மூத்த மகனை ஏன் தண்டிக்கறீங்க, அதான் நான் நடந்ததை சொன்னேனே அப்புறமாவும் அவரை வீட்டுக்கு கூப்பிடாம இருந்தா எப்படி, எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு, என்னால அப்பா மகன் பிரிஞ்சிருக்கறது குற்ற உணர்ச்சியா இருக்கு, இப்படியே போனா என்னால வாழவே முடியாது, தயவு செஞ்சி உங்க மூத்த மகனை கூப்பிடுங்க” என்றாள் ஆனால் அவரோ இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு
”எல்லாமே கைவிட்டுப் போயிடுச்சி ஜானகி, எந்த முகத்தை வைச்சிக்கிட்டு அவனை போய் பார்த்து கூட்டிட்டு வர சொல்ற, அவன் வயசுக்கு எப்படி எப்படியோ வாழ வேண்டியவன் ஆனா, அப்படியா இருந்தான் ரொம்ப ஒழுக்கமானவனா இருந்தான், சின்ன தப்போ, அவப்பெயரோ தனக்கு வந்துடக் கூடாதுன்னு நேர்மையா நடந்துக்கிட்டான், கம்பெனியை நஷ்டத்தில இருந்து லாபத்துக்கு கொண்டு வர எவ்வளவு பாடுபட்டான் தெரியுமா, நானும் பிரபுவும் கிளப், குதிரை பந்தயம்னு அலைஞ்சி திரிஞ்சோம், அப்ப கூட அவன் எங்களை திருந்தச் சொன்னான் அப்படிப்பட்டவனை தப்பு செஞ்சிட்டதா ஒரு நொடி தப்பா நினைச்சி அவனை இந்த கையால அடிச்சி சே எனக்கே என்மேல கோபம் வருதும்மா, இதுல நான் எப்படி அவனை போய்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.