This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“அபினவ், முதல்ல வெளியே போங்க!” அஹல்யாவின் குரலில் இப்போது கோபம் அதிகமாகி இருந்தது.
"போறேன் அஹல்யா. இந்த வீட்டுல எத்தனை ரூம் இருக்கு என்ன மாதிரியான வசதி எல்லாம் இருக்குன்னு பார்க்கிறேன்,” என்று சொல்லிக் கொண்டே நடந்தான் அபினவ்.
“எதுக்கு பார்க்குறீங்க?”
“இந்த வீடு உனக்கு வேண்டாம் அஹல்யா. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம எல்லோருக்கும் செட் ஆகுற மாதிரி வேற வீடு பார்க்கனும். அதுக்கு தான் பார்த்தேன். ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு வேண்டிய ஏற்பாடை நான் செய்றேன். நீ இன்னும் என் கிட்ட சொல்ல ஏதாவது பாக்கி இருக்கா?”
அபினவ் பேச்சின் பொருள் புரிந்தப் பிறகும் என்ன சொல்வது, என்ன செய்வது என்றுப் புரியாமல் தடுமாறினாள் அஹல்யா.
அபினவ் எந்த அவசரமும் இல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு மெளனமாக நின்றான்.
“அபினவ்!” அழைத்தப்படி அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் அஹல்யா.
கெட்டியாக பிடித்தால் எங்கே அவனுக்கு வலித்து விடுமோ என்று யோசிப்பவளைப் போல மென்மையாக அவள் பிடித்திருந்தது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.
மார்பில் பட்ட ஜில்லிப்பு அஹல்யா அழுகிறாள் என்பதை உணர்த்தவும் அந்த சிரிப்பு சுவடில்லாமல் காணாமல் போனது.
அவளாக அழுது முடிக்கட்டும் என்று அசையாமல் நின்றான்.
“பாவம்னு யோசிச்சு தானே கல்யாணம் செய்துக்குறீங்க?” அழுகையின் கூடவே கேட்டாள் அஹல்யா.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.