“ஓகே... ஓகே... ஆனந்த், காரை எடுக்குறீங்களா?”
“அது!” என்று கெத்தாக சொல்லி விவேக் காரை ஸ்டார்ட் செய்ய, பாரதி மலர்ந்து மின்னும் விழிகளால் அவனை ரசித்தாள்!
🌼🌸❀✿🌷
பேசிக் கொண்டே இருவரும் வீட்டை வந்து அடைந்தார்கள். காரில் இருந்து இறங்கும் முன்பே அவனுடன் அவர்கள் அறைக்கு வருமாறு சொல்லிவிட்டு தான் வந்தான் விவேக். அப்போது, சரி என தலை அசைத்த பாரதி, வீட்டின் ஹாலில் உமா மட்டும் அல்லாமல், நரேந்திரனும், கற்பகமும் இருக்கவே, தயக்கத்துடன் விவேக்கைப் பார்த்தாள். விவேக் அதற்கு எல்லாம் மாறும் ஆளா என்ன?
“என்ன நினைச்சிட்டு இருக்க நீ? முதல்ல வேலை முடியட்டும்ன்னு சொன்ன, அப்புறம் ரோடுன்னு சொன்ன, இப்போ இன்னும் என்ன லுக்? ஒழுங்கா வந்து சேரு...” என்றான் விவேக் ரகசியமாக பாரதிக்கு மட்டும் கேட்கும் விதத்தில்.
பாரதிக்கும் கணவனின் அருகே இருக்க தான் பிடித்திருந்தது... அவன் சொல்வதில் இருக்கும் உண்மையும் உரைக்க... விவேக்கை கோபப் படுத்த மனம் வராமல், உடை மாற்றி வருவதாக உமாவிடம் சொல்லி விட்டு அவனை தொடர்ந்து சென்றாள்.
நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த நரேந்திரன், ஒரு புன்னகையுடன் கற்பகத்தைப் பார்த்தார். ஆனால் அவரின் மனைவியோ அவர் பார்த்து புன்னகைத்த அதே காட்சியை பார்த்து மனதில் வேறு சிந்தனையில் இருந்தாள்.
எப்போதும் கற்பகத்தை வீட்டில் பார்த்ததும் விவேக் அவளிடம் நேரம் செலவிட்டு பேசுவான், செல்லம் கொஞ்சுவான்... ஆனால் இன்று அதே விவேக் கையை மட்டும் அசைத்து விட்டு சென்றது கற்பகத்தின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருந்தது... பாரதி வேறு விவேக்கை தொடர்ந்துப் போகவும், இதற்கெல்லாம் காரணம் பாரதி தான் என்ற எண்ணமும் எழுந்தது...
'கல்யாண ஆன புதுசுல, ஒன்னு இரண்டு மாசம் இப்படி பொண்டாட்டி பின் சுற்றினால் சரி, இவன் என்ன நாலு மாசமா இப்படி இவள் பின்னாடி சுத்திட்டு இருக்கான்?'
🌼🌸❀✿🌷
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.