“பாவம் விவேக்! அவனுக்கு இந்த விஷயம் தெரியுமோ என்னவோ? ஸ்ருதிக்கு இது தெரிஞ்சப்போ ரொம்பவே வருத்தப் பட்டா. அவ கல்யாணம் வேண்டாம்னு சொன்னதால தானே விவேக் இந்த பாரதியை போய் கல்யாணம் செய்துக்க வேண்டியதாச்சுன்னு அவளுக்கு ஒரே வருத்தம்... உன் முகத்தை பார்த்தா உனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது போல இருக்கே! விவேக்கிற்கும் தெரியாதோ?” என்று தன் விஷமப் பேச்சை தொடர்ந்தாள்.
மேலும் சில நிமிடங்கள் இதே போல் பேச்சு தொடரவும், கற்பகத்திற்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. நல்ல வேளையாக மீட்டிங் முடியும் நேரமாகவும், அங்கே இருந்த ஒவ்வொருவராக கிளம்பினார்கள். கற்பகமும் நேரமாவதாக சொல்லி விட்டு கிளம்பினாள்! ஆனால், வரும் வழியில் எல்லாம் அவளின் மனதில் ஒரே கேள்வி தான் இருந்தது.
'விவேக்கிற்கு பாரதியின் இந்த கல்லூரி காதல் பற்றி தெரியுமா தெரியாதா?'!!!
கற்பகம் வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, பாரதி கல்லூரியில் இருந்து வந்திருக்கவில்லை. அவள் வருவதற்காக பொறுமையை இழுத்துப் பிடித்து காத்திருந்தாள் கற்பகம். எல்லா நாட்களையும் போல விவேக்குடன் வந்த சின்ன மருமகளை ஒரு விதமாக பார்த்தவள்,
“பாரதி, டிஃபன் சாப்பிட்டுட்டு என் ரூமுக்கு வா. நான் உன் கூட கொஞ்சம் பேசனும்,” என்றாள்!
பாரதி மட்டுமல்லாது விவேக்கின் முகத்திலும் கேள்வி தோன்றியது... ஆனால் பாரதி கேள்வி ஒன்றும் கேட்காமல் பதிலாக தலையை அசைக்கவும், விவேக்கும் ஏதோ சாதாரண விஷயம் என அமைதியாகவே அங்கிருந்து நகர்ந்தான்...!
🌼🌸❀✿🌷
அழைத்தது கற்பகம் என்பதால் பாரதி பத்து நிமிடங்களில் எல்லாம் கற்பகத்தின் அறையில் இருந்தாள்.
பாரதி அங்கே வந்த போது, உமா கற்பகத்திடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். முகம் கழுவி சேலை மாற்றி விட்டு, விவேக்கிற்கு மட்டும் டிஃபன் எடுத்து கொடுத்து விட்டு நேராக கற்பகத்துடன் பேச வந்திருந்தாள் பாரதி.
மருமகள் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.