”சரி எவ்ளோ ஆச்சின்னு சொல்லுங்க” என கேட்க கடைக்காரரோ வேண்டுமென்றே விலையை குறைத்துச் சொல்ல அவனோ ஆச்சர்யப்பட்டான்
”அவ்ளோதானா” என சொல்லிக் கொண்டே பணத்தை தந்துவிட்டு பொருளுடன் கணக்குபிள்ளையை அழைத்துக் கொண்டு பைக்கில் ஏறி பறந்தான்.
”அடுத்து எங்கடா போறது”
”பேன்சி ஸ்டோருக்குதான்”
”ஷ்ஷ் நான்லாம் அங்க போனதேயில்லை”
”நான் மட்டும் என்ன தினமுமா போறேன், இனிமேல நீ அடிக்கடி இந்த மாதிரி கடைகளுக்கு போய் வர வேண்டியிருக்கும் கொம்பா, எதுக்கும் கடைக்காரங்களை பரிச்சயம் செய்து வைச்சிக்க சலுகைகள் கிடைக்கும் பாரு” என சொல்ல கொம்பனும் சரிசரியென தலையாட்டிவிட்டு நேராக பேன்ஸி ஸ்டோருக்குச் சென்றான்.
அங்கு கணக்குப்பிள்ளைக்கு தெரிந்தவன் இருந்த காரணத்தால் வேலை சுலபமாகி விட்டது. அங்கும் பெரிதாக அவமானம் ஏற்படவில்லை, விரைவாகவே பொருட்களை வாங்கிகொண்டார்கள்.
”கொம்பா எப்படியோ இன்னிக்கு எங்கயும் நம்ம மானம் போகாம தப்பிச்சிட்டோம் இப்பதான் நிம்மதியா இருக்கு”
”எனக்கும்தான் ஒருவேளை எனக்கு மட்டும் அவமானம் நடந்திருந்திருந்தது என் முறைப்பொண்ணை நான் சும்மாவே விட்டிருக்க மாட்டேன்“
”அட போ கொம்பா வசனம்லாம் நல்லாதான் இருக்கு ஆனா செயல்பாட்டுல இல்லையே”
“என்னடா சொல்ற”